February 25, 2024

Tamil

நேரலை செய்திகள் புதுப்பிப்புகள்

 • கடன் தொல்லை.. மன உளைச்சலுக்கு ஆளான நபர்.. மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி – வெளியான அதிர்ச்சி Video!
  on February 25, 2024 at 9:39 am

  கடலூர் அடுத்த குண்டு உப்பலவாடி பகுதியைச் சார்ந்தவர் தயாநிதி. இவர் ஆல்பேட்டை பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது தாயின் மருத்துவ செலவுக்காக 20க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூபாய் 1.5 கோடி வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கடன் அளித்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி செலுத்தக் கோரிய நிலையில் பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தயாநிதி வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • காதல் படங்களின் காட்ஃபாதர்… இயக்குனர் கவுதம் மேனனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
  on February 25, 2024 at 9:38 am

  இன்று 50-வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் கவுதம் மேனனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். இயக்குனர் கவுதம் மேனன் கேரளாவில் பிறந்தவராக இருந்தாலும், அவர் படித்ததெல்லாம் தமிழ்நாட்டில் தான். இஞ்ஜினியரிங் படித்த அவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததால், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். கடந்த 1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்சார கனவு திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கவுதம் மேனன், 2001-ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார். தமிழில் அவர் இயக்கிய முதல் திரைப்படம் மின்னலே. மாதவன் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ரீமா சென் நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் வேறலெவல் ஹிட் அடித்தன. காதலர்கள் காலம் கடந்து கொண்டாடும் வகையில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக மின்னலே உருவானது. அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா உடன் கூட்டணி அமைத்தார் கவுதம் மேனன். இவர்கள் கூட்டணியில் உருவான முதல் படம் காக்க காக்க. ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இதை எடுத்திருந்தாலும், இதில் சூர்யா ஜோதிகா இடையேயான காதல் காட்சிகளை மிகவும் அழகாக காட்சிப்படுத்தி அதில் தான் ஒரு கில்லாடி என்பதை நிரூபித்து இருப்பார். கமல்ஹாசனின் தீவிர ரசிகனான கவுதம் மேனன், அவரை வைத்து இயக்கிய ஒரு மாஸ்டர் பீஸ் படம் தான் வேட்டையாடு விளையாடு. ஒரு இயக்குனராக மட்டுமின்றி ஒரு ரசிகனாக அப்படத்தை செதுக்கி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இதையும் படியுங்கள்… தமிழ்நாட்டில் மலையாள படத்துக்கு ஏற்பட்ட டிமாண்ட்.. மாஸ் காட்டும் மஞ்சுமெல் பாய்ஸ் – அதில் அப்படி என்ன ஸ்பெஷல்? பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் என ஆக்‌ஷன் கலந்த காதல் படங்களை இயக்கி வந்த கவுதம் மேனன், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் ரொமாண்டிக் டிராக்கிற்கு திரும்பினார். முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் படங்கள் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு வேறலெவல் ஹிட் ஆனது. சிம்பு திரிஷாவின் கெமிஸ்ட்ரி, ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும்  கவுதம் மேனனின் திரைக்கதை என அனைத்தும் சரிவர கலந்து ஒரு கிளாசிக் ஹிட் படமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின்னர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. அதுமட்டுமின்றி அவர் பட தயாரிப்பில் இறங்கி அதில் பல கோடி நஷ்டம் அடைந்ததால், படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிக்க சென்றுவிட்டார். கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வந்தார். தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி கிடப்பில் போடப்பட்ட ஜோசுவா மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம். அதன்படி அவருக்கு ரூ.25 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் கேரளாவில் வீடும் உள்ளது. பல்வேறு சொகுசு கார்களையும் வாங்கி வைத்திருக்கிறார் கவுதம் மேனன். இதையும் படியுங்கள்… விடுதலை படத்தின் விஸ்வரூப வெற்றிக்கு பின் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய சூரி – அதுக்குன்னு இவ்வளவா?

 • கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு குப்பைகளை அள்ளிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்..!
  on February 25, 2024 at 9:30 am

  மயிலாடுதுறை நகராட்சியில் மெகா தூய்மை பணிகளை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கையில் கிளவுசை மாட்டிக் கொண்டு களத்தில் இறங்கி குப்பைகளை அகற்றினார்.  மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மெகா தூய்மைப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை 5-வது புதுத்தெருவில் “கிளீன் மயிலாடுதுறை கிரீன் மயிலாடுதுறை” என்ற சிறப்பு திட்டத்தில் தொடங்கிய பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதையும் படிங்க: ஒரே ஒரு தொகுதி தான்.. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டி.! திமுகவின் நிபந்தனையால் அதிர்ச்சியில் வைகோ  மயிலாடுதுறை நகரில் 86 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த பணிகள் தொடங்கின. 15 ஜேசிபி இயந்திரங்கள், 40 டிராக்டர்களுடன் நகராட்சி ஊழியர்கள் மற்றும் 400 தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாப்படுகை கிட்டப்பா பாலம் பகுதிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை கண்டவுடன், தானே களத்தில் இறங்கி கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு குப்பைகளை அகற்ற தொடங்கினார்.  இதையும் படிங்க:  சென்னையை உலுக்கிய ஆணவக் கொலை.. இதற்காக தான் கொலை செய்தோம்.. கைதான 4 பேர் பகீர் தகவல்.! சுமார் 15 நிமிடங்கள் வரை மாவட்ட ஆட்சியர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதால், அவருடன் சென்ற கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நகராட்சி தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக மயிலாடுதுறை நகராட்சியை தூய்மையான நகராட்சியாக பராமரிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 • சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் இருந்து ரூ.1.57 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
  on February 25, 2024 at 9:17 am

  சென்னையில் இருந்து மும்பை செல்ல விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் இருந்து ரூ.1.57 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் உள்நாட்டு முனையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பய்ணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் சோதனை செய்தனர்.  அப்போது மும்பை செல்லவந்த விக்கி ஜெகதீஸ் பாட்டியா(35) என்ப்வரின் சூட்கேஸை ஸ்கேனிங் சோதனை செய்தனர். அப்போது கட்டுக் கட்டாக இருப்பதை கண்டுபிடித்தனர். இது பற்றி பயணியிடம் கேட்ட போது பிஸ்கட் பாக்கெட்டுகள் துணிகள் எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் சந்தேகம் அடைந்த ம்த்திய தொழில் பாதுகாப்பு  போலீசார் சூட்கேசை திறந்து சோதனை செய்தனர்.  அப்போது துணிகள், பிஸ்கட்கள் வெளியே எடுத்த பின்னரும் சூட்கேஸ் கனமாக இருந்தது.  சூட்கேசை முழுமையாக சோதித்த போது அடிப்பாகத்தில் ரகசிய அறை வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். 13 பாக்கெட்டுகளில் அமெரிக்க டாலர்களும் 5 பாக்கெட்டுகளில் சவூதி ரியால்களும் இருந்தன. ரூ. 1 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்களை பறிமுதல் செய்தனர்.  இது குறித்து பயணியிடம் மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் டி.ஐ.ஜி. ஶ்ரீராம் விசாரணை நடத்தினார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளுடன் மும்பை வாலிபரை விமான நிலைய வருமான வரி துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  உள்நாட்டு விமான நிலையத்தில் ஒன்றரை கோடி வெளிநாட்டு கரன்சி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 • நீருக்கடியில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகா நகரம்: ஆழ்கடலில் பிரதமர் மோடி வழிபாடு!
  on February 25, 2024 at 9:01 am

  பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓகா பெருநிலப்பகுதியையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்ட சுதர்சன் சேது திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது, சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமாகும். தொடட்ந்து, பேட் துவாரகா கோயிலில் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, துவாரகாதீஷ் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். இதையடுத்து, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். நீருக்கடியில், ஆழ்கடலுக்குச் சென்ற பிரதமர் மோடி, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். இந்த நகரம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் நெருங்கிய தொடர்புடைய புராதன நகரமாக இருந்தது. பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, இது நீர்நிலைகள் வழியாகச் செல்லும் பயணம் மட்டுமல்ல, துவாரகா நகரத்தின் புகழ்பெற்ற கடந்த காலத்தையும், இந்து மதத்தின் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவரான கிருஷ்ணருடனான அதன் தொடர்பையும் உணர்த்தும் ஒரு வழியாகும்.   To pray in the city of Dwarka, which is immersed in the waters, was a very divine experience. I felt connected to an ancient era of spiritual grandeur and timeless devotion. May Bhagwan Shri Krishna bless us all. pic.twitter.com/yUO9DJnYWo — Narendra Modi (@narendramodi) February 25, 2024   இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகிமை மற்றும் நித்திய பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.” என பதிவிட்டுள்ளார். உலகெங்கிலும் பழமையான நகரங்கள் பல நீருக்கடியில் மூழ்கியுள்ளன. இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு கூறுகிறது. இதில் துவாரகா நகாரம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்த நகரம், இந்தியாவில் உள்ள ஏழு புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மான் கி பாத் 110ஆவது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி! நீருக்கடியில் மூழ்கிய துவாரகா நகரின் பழமையை கணிப்பது கடினம் என்கிறார்கள். இந்து மத நம்பிக்கையின்படி, இந்த நகரம் முதலில் கிருஷ்ணரால் நிறுவப்பட்டது. அவர் அங்கிருந்து வெளியேறிய பிறகு, அந்த நகரம் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இது தற்போதைய துவாரகா நகரின் அருகிலேயே உள்ளது. துவாரகை கடலில் இந்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் நீருக்கடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, சில பொருட்கள் கண்டறியப்பட்டன. அவை பண்டைய காலத்தில் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எனப்படுகிறது.

 • உதகை அரசு தாவரவியல் பூங்கா.. மிதமான வெப்பத்தில் மனதை மயக்கும் லில்லியம் மலர்கள் – குவியும் சுற்றுலா பயணிகள்!
  on February 25, 2024 at 8:55 am

  உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகள் பனி பொழிவிலிருந்து பாதுகாக்க கோத்தகிரி காட்டுச் செடிகளை கொண்டு பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் உலக பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மலர்க கண்காட்சிக்காக வெளிநாட்டு ரகங்களான லில்லியம், பெட்டூனியா, சால்வியா உள்ளிட்டவை இங்க வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். இந்நிலையில் தற்போது அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் லில்லியம் மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது. இந்த மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதோடு அதன் அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

 • கெட்டப்பை மாற்றி.. சட்டையை கழட்டி விட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்! பாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சிட்டாங்க!
  on February 25, 2024 at 8:45 am

  நடிகை ரம்யா பாண்டியன், டோட்டலாக தன்னுடைய கெட்டப்பை மாற்றிக்கொண்டு, எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.   வெயிட்டான சினிமா பேக்கிரவுண்ட் இருந்தும் மிகவும் சட்டிலாக தன்னுடைய திறமை மூலம் பட வாய்ப்பை தேடிய திருநெல்வேலி பொண்ணு தான் ரம்யா பாண்டியன். இவரின் சித்தப்பா அருண் பாண்டியன், தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. ரம்யா பாண்டியனுக்கு திரையுலகில் ஆர்வம் வர ஒரு முக்கிய காரணம் இவர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நேச்சுரல் ஸ்டார் நானி பிறந்தநாள் ஸ்பெஷலாக Nani32 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது! பூர்வீகம் இவருக்கு திருநெல்வேலிஎன்றாலும் , இவர் வளர்த்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். எனவே கல்லூரியில் படிக்கும் போதில் இருந்தே… நண்பர்களில் குறும்படங்களில் நடித்து வந்தது மட்டும் இன்றி, பட வாய்ப்புகளையும் தேடிக்கொண்டிருந்தார். எதேர்சையாக, டம்மி டப்பாசு படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்ற ரம்யா பாண்டியன் இந்த படத்தில் நடிக்க தேர்வானார். இதுவே இவரின் அறிமுக படமாகவும் அமைந்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. Jovika: வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள்! ஸ்ட்ராப் லெஸ் உடையில்.. சைடு போஸ் கொடுத்த ஜோவிகா! இதை தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தில் ரம்யா பாண்டியனுக்கு சில மணிநேரம் வந்து செல்லும் வெயிட்டான ரோல் கிடைத்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். இதை தொடர்ந்து இவர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்த ஆண் தேவதை படம் படு தோல்வியை சந்தித்தது. பட வாய்ப்பை பிடிக்க, தன்னுடைய இடையழகை காட்டி இவர் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட் பட்டி தொட்டி எங்கும் பரவியது. ‘ஆட்டோகிராப்’ பட நடிகை மல்லிகாவா இது? உடல் எடை கூடி அடையாளமே தெரியல! மகன் – கணவரோடு இருக்கும் போட்டோஸ்! இதை தொடர்ந்து, சின்னத்திரையை தன்னுடைய சாய்சாக தேர்வு செய்த ரம்யா பாண்டியன்… குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக களமிறங்கி தன்னுடைய சமையல் திறமையை வெளிக்காட்டினார். இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மூன்றாவது ரன்னர் அப்பாக வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2-ஆவது ரன்னர் அப்பாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தூங்க கூட விடமாட்டா.. வயிற்றுக்குள் குழந்தை செய்த சேட்டை! தினமும் பிரசன்னா இதை செய்வார்.. சினேகா பகிர்த தகவல்! மேலும் தொடந்து தரமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும், ரம்யா பாண்டியன் கைவசம் தற்போது இடும்பன்காரி என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தைகள் போய் கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, நடிப்பில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது வேற லெவல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.   செம்ம ஸ்டைலிஷாக, தன்னுடைய கெட்டப்பை முழுமையாக மாற்றி… ரம்யா பாண்டியன் மேலே அணிந்துள்ள சட்டையை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  ரேட்டிங்கில் பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டிவி தொடர்கள்? மளமளவென டிஆர்பியில் டாப்புக்கு வந்த விஜய் டிவி சீரியல்!

 • பழனியில் அதிரடி வேட்டை.. கஞ்சா விற்ற 11 பேரை கையும், களவுமாக பிடித்த போலீஸ்.. பாராட்டும் பொதுமக்கள்.!
  on February 25, 2024 at 8:43 am

  பழனி பகுதியில் கடந்த 4 நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கஞ்சா விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடந்து வருவதாக பழனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அலுவலகம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நிலக்கோட்டை அருகே உள்ள பழைய சிலுக்குவார்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் ராஜேஸ்குமார் (42), தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடியை சேர்ந்த பாண்டியன் மகன் பூபதி (32), பழனி தேவாங்கர் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் கோபிநாத் (30), பழனியை சேர்ந்த சிவக்குமார் மகன் ஹரிவிக்னேஷ்குமார் (22) என்பதும், கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சுமார் 1 கிலோ 900 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.  பழனி டவுன் மற்றும் அடிவார பகுதியில் கடந்த 4 நாட்களாக நடத்திய அதிரடி வேட்டையில் கஞ்சா விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் பழனி போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 • எம்.எஸ்.தோனியின் கோட்டை – ஒரு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக அறிமுக போட்டியில் துருவ் ஜூரெல் சாதனை!
  on February 25, 2024 at 8:41 am

  இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான துருவ் ஜூரெல் 90 ரன்கள் எடுத்துக் கொடுத்து சாதனை படைத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து 353 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்துக் கொடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.   பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. இதில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா 2, சுப்மன் கில் 38, ரஜத் படிதார் 17, ரவீந்திர ஜடேஜா 12, சர்ஃபராஸ் கான் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 என்று அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 117 பந்துகள் பிடித்து 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரேல் இருவரும் நிதானமாக நின்று விளையாடி விக்கெட் சரிவிலிருந்து மீட்டு ரன்களும் குவித்தனர். இரண்டாம் நாளில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். குல்தீப் யாதவ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆகாஷ் தீப் களமிறங்கினார். ஆனால், அவருக்கு அதிக ஸ்டிரைக் கொடுக்காமல் விளையாடிய துருவ் ஜூரெல் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அதோடு சல்யூட் அடித்து தனது நன்றியை வெளிக்காட்டினார். அவருக்கு ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு தொடர்ந்து விளையாடிய அவர் ஸ்பின் பவுலிங்கை நன்றாக பயன்படுத்தி இந்திய அணியை 300 ரன்கள் எட்ட உதவினார். இதற்கிடையில் ஆகாஷ் தீப் 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஜூரெல் 90 ரன்கள் எடுத்திருந்த போது டாம் ஹார்ட்லி பந்தில் கிளீன் போல்டானார். இறுதியாக இந்திய அணி 307 ரன்கள் மட்டுமே எடுத்து 46 ரன்கள் பின்தங்கியது. இதையடுத்து டிர்ஸிங் ரூமிற்கு சென்ற துருவ் ஜூரெலுக்கு இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என்று அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்துள்ளனர். தனி ஒருவராக இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு 307 ரன்கள் எட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். ஆனால், 10 ரன்களில் அறிமுகப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டுள்ளார். எனினும், அவரது சிறப்பான பேட்டிங்க்ப் பார்த்த முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி பிறந்து வளர்ந்த ராஞ்சியில் ஒரு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமான ஜூரெல் 90 ரன்கள் எடுத்துக் கொடுத்து இந்திய அணி 307 ரன்கள் குவிக்க வித்திட்டுள்ளார்.

 • இளைஞர்களுடன் உற்சாகமாக மராத்தான் ஓடிய அமைச்சர் அன்பில் மகேஷ், பொன்முடி!
  on February 25, 2024 at 8:31 am

  தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கங்கள், நலத்திட்ட உதவிகள், மராத்தான் ஓட்டம், விளையாட்டுப் போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பாகவும், தொ.மு.ச  தொழிற்சங்கம் சார்பாகவும் திருச்சி சுப்பிரமணியபுரம் அருகே உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று மராத்தான் போட்டி நடைபெற்றது. ஒரே ஒரு தொகுதி தான்.. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டி.! திமுகவின் நிபந்தனையால் அதிர்ச்சியில் வைகோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகம், திமுக துணை பொது செயலாளர் பொன்முடி, திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மரத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஓடினர். திமுக துனை பொது செயலாளர் பொன்முடி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்  திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த மராத்தான் போட்டியில்  இளைஞர்களுடன் ஓடி உற்சாகத்தை ஏற்படுத்தினர்.

 • அதிமுகவா.?பாஜகவா.?யாருடன் கூட்டணி.? நாளை முக்கிய முடிவு வெளியிடுகிறார் ஜி.கே.வாசன்
  on February 25, 2024 at 8:30 am

  நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையே தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முதல் கட்டத்தை முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்ததையை ஆரம்பித்துள்ளது. இதில் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அடுத்த கட்டமாக கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இன்று மாலை பேச்சுவார்த்தையானது நடைபெற உள்ளது. அடுத்தடுத்து திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏற்பட்டு வருகிறது.அதே நேரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக அதிமுக கூட்டணி தொடர்ந்து நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. எனவே இரண்டு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்து வருகிறது. இதற்காக பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுக்க தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வருவதால் தங்கள் டிமான்டை  அதிகரித்துள்ளது இதனால் கூட்டணி இன்னமும் முடிவடையாமல் இழுபறிகளிலேயே உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பாஜகவை ஒன்றிணைக்கும் பணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் ஈடுபட்டிருந்தார். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக தேசிய தலைமையை நேரில் சென்று சந்தித்து பேசி இருந்தார். ஆனால் மீண்டும் பாஜகவுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என அதிமுக சார்பில் உறுதியாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது கேள்விக்குறியே ஏற்படுத்தி இருந்தது.  செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நடத்தியது.அதில் அதிமுகவா -பாஜக கூட்டணியா என கேள்வி எழுப்பப்பட்டு இருந்து இது பெரும்பாலானவர்கள் அதிமுக கூட்டணியே செல்ல வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை கூட்டணி தொடர்பான இறுதி முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

 • தமிழ்நாட்டில் மலையாள படத்துக்கு ஏற்பட்ட டிமாண்ட்.. மாஸ் காட்டும் மஞ்சுமெல் பாய்ஸ் – அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?
  on February 25, 2024 at 8:24 am

  மலையாளத்தில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்துள்ள மஞ்சுமெல் பாய்ஸ் என்கிற திரைப்படத்துக்கு தற்போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து நல்ல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து வருகிறது மலையாள சினிமா. அந்த பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைந்துள்ள படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கி உள்ளார். இதில் கலீத் ரஹ்மான், செளபின் சாஹிர், ஜான் பால் லால், ஸ்ரீநாத் பாசி, கணபதி என இளம் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி திரைக்கு வந்தது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது மஞ்சுமெல் பாய்ஸ். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். கேரளாவின் மஞ்சுமெல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். அப்போது அங்குள்ள குணா குகையில், அவர்களின் நண்பர் ஒருவர் எதிர்பாரா விதமாக சிக்கிக் கொள்கிறார். உடன் வந்தவர்கள் தன் நண்பனை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. இதையும் படியுங்கள்… விடுதலை படத்தின் விஸ்வரூப வெற்றிக்கு பின் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய சூரி – அதுக்குன்னு இவ்வளவா? இப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாலும், அதில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் குணா பட ரெபரன்ஸ் போன்றவற்றாலும், மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு தற்போது தமிழ்நாட்டிலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு தமிழ்நாட்டில் செம்ம டிமாண்ட் நிலவி வருகிறதாம். சென்னை, கோவை, திருச்சி போன்ற சிட்டிகளை தொடர்ந்து பி செண்டர்களிலும் இப்படத்தை திரையிடுவதற்கான பணிகள் நடைபெறுகிறதாம். மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் இப்படம் பிக் அப் ஆகி உள்ளதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமம் படத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக டிமாண்ட் உள்ள மலையாள படமாக மஞ்சுமெல் பாய்ஸ் மாறி இருக்கிறது.  இதையும் படியுங்கள்… நேச்சுரல் ஸ்டார் நானி பிறந்தநாள் ஸ்பெஷலாக Nani32 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

 • சொன்னதை செய்து காட்டிய இபிஎஸ்.. அதிமுக – பாமக கூட்டணி உறுதியானது? எத்தனை தொகுதிகள் தெரியுமா?
  on February 25, 2024 at 8:10 am

  அதிமுக – பாமக கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதை அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்தது. முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் முன்வரவில்லை என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடும் என்றார்.  இதையும் படிங்க: ஒரே ஒரு தொகுதி தான்.. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டி.! திமுகவின் நிபந்தனையால் அதிர்ச்சியில் வைகோ இந்நிலையில், வட மாவட்டங்களில் செல்வாக்க மிக்க கட்சியாக பார்க்கப்படும் பாமக அதிமுக, பாஜக இருதரப்பிலும் பேசி வருவதாகவும் அதிக தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கொடுக்கும் கட்சிகளுடனே கூட்டணி என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். ஆகையால் பாமக தங்கள் பங்கம் இழுக்க அதிமுக, பாஜக போட்டா போட்டிக்கொண்டு ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில், திடீர் திருப்பமாக அதிமுக – பாமக கட்சிக்கு  தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.  இதையும் படிங்க:  ராமநாதபுரம் மக்களவை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு.. வேட்பாளர் யார் தெரியுமா? எந்த சின்னத்தில் போட்டி? பாமகவை எப்படியாவது கூட்டணிக்கு கொண்டு வரவேண்டும் என பாஜக தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் பாமக அதிமுக இடையே உடன்பாடு எட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அண்ணாமலையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக துணைத் தலைவர் கே.வி. ராமலிங்கம் பாமக இரண்டு தரப்பிலும் பேரம் பேசி வருவதாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 • இஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளம்: குலசேகரன்பட்டினத்தில் அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!
  on February 25, 2024 at 8:01 am

  இந்தியாவின் விண்வெளி ஏவுதள திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான இரண்டாவது விண்வெளி ஏவுதளத்தை நிறுவ உள்ளது. இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஏவுதம் நாட்டின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு புவியியல் ரீதியாக சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி பிரதமர் மோடி இந்தப் புதிய ஏவுதளம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார். குலசேகரப்பட்டினம் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களில் உள்ள படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி மற்றும் மாதவன்குறிச்சி ஆகிய கிராமங்களில் 2,233 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏவுதளம் அமைய உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தின் முக்கியத்துவத்தைக் எடுத்துக்கூறியுள்ளனர். செயற்கைக்கோள் ஏவுதலின் போது எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் இந்த ஏவுதளம் உதவும் என்கிறார்கள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் விண்வெளித் தளத்திலிருந்து ஏவுவது போலன்றி, இலங்கையின் வான்வெளியைத் தவிர்க்க தென்கிழக்குப் பாதைகள் தேவைப்படுகின்றன. இந்த அணுகுமுறை எரிபொருளைச் சேமிப்பதோடு தென் துருவத்தை நோக்கிச் செல்லவும் எளிதாக இருக்கும். குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் இந்தியாவின் விண்வெளி ஆய்வுத்துறை லட்சியங்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். விண்வெளித் துறையின் திறன்களை பன்முகப்படுத்துவதன் மூலமும், புவியியல் நன்மைகளை மேம்படுத்துவதன் மூலமும், உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியா முன்னணி நிலைக்கு உயர வழிவகுக்கும் என இஸ்ரோ கூறுகிறது. புதிய விண்வெளி ஏவுதளம் விண்வெளி ஆய்வுத் துறையில் புதுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை காட்டுவதாகவும் இருக்ககிறது. எதிர்கால பணிகள் மற்றும் முயற்சிகளுக்கு ஆதரவாக உள்கட்டமைப்பு மற்றும் ஏவுதள வசதிகளில் முதலீடு செய்வது இன்றியமையாத தேவையாகவும் உள்ளது. இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்! குஜராத்தில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

 • நேச்சுரல் ஸ்டார் நானி பிறந்தநாள் ஸ்பெஷலாக Nani32 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
  on February 25, 2024 at 8:00 am

  தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ச்சியாக ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்து அசத்தி வருகிறார்.  தற்போது டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரில் உருவாகும் “சூர்யாவின் சனிக்கிழமை” படத்தில் நடித்து வருகிறார். நடிகர் நானியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக இப்படத்தின் டீசரை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்த  தயாரிப்பு நிறுவனம்,  மற்றொரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.  Jovika: வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள்! ஸ்ட்ராப் லெஸ் உடையில்.. சைடு போஸ் கொடுத்த ஜோவிகா! நானியின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு  இரட்டை விருந்தளித்துள்ளது.  டி.வி.வி என்டர்டெயின்மென்ட்  பேனரின் கீழ் நானி 32 படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்தை இயக்குநர் சுஜீத் இயக்கவுள்ளார். தற்போது படப்பிடிப்பில்  இருக்கும் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடனான “ஓஜி” படத்தை இயக்கி வரும் சுஜீத், தனது அடுத்த படத்தில் நானியுடன் இணையவுள்ளார். சூர்யாவின் சனிக்கிழமை  படப்பிடிப்பு முடிந்தவுடன், நானி 32 படத்தின் பணிகள் துவங்கும்.  இது குறித்து நடிகர் நானி வலைத்தளத்தில் “இது முழுமையான சுஜீத் படம். பவருக்குப் பிறகு… இந்த லவ்வரிடம் வருவார்  #Nani32” என்று மகிழ்ச்சி பொங்க பகிர்ந்துள்ளார். அதிரடியான ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பு,  ஒரு அழகான கான்செப்ட் வீடியோ மூலம் வெளியிடப்பட்டது. ஒரு வன்முறையாளன் அகிம்சையாளனாக மாறினால், அவனது உலகம் தலைகீழாக மாறும். இதுதான் படத்தின் அடிப்படைக் கதை. இது தனித்துவமானதாக இருக்கும் அதே நேரத்தில் புதிரானதாகவும் அமைந்துள்ளது. “உடனே ஜட்ஜ் பன்றாங்க”.. கவர்ச்சியாக ஏன் நடிப்பதில்லை – ஓப்பனாக பேசிய பிரபல நடிகை பிரியங்கா மோகன்! நானி 32வது திரைப்படம் 2025 இல் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

 • கும்ப்ளே சாதனையை முறியடித்த அஸ்வின் – இந்தியாவுல 350 விக்கெட் கைப்பற்றி வரலாற்று சாதனை!
  on February 25, 2024 at 7:59 am

  ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 2ஆவது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் 3ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில், குல்தீப் யாதவ் 131 பந்துகள் நின்று 2 பவுண்டரி உள்பட 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பவுலர் 131 பந்துகள் வரையில் நின்று விளையாடியது இதுவே முதல் முறையாகும். அடுத்து வந்த ஆகாஷ் தீப் தன் பங்கிற்கு 29 பந்துகள் வரையில் நின்று ஒரு சிக்ஸர் உள்பட 9 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். கடைசி வரை நிதானமாக விளையாடிய துருவ் ஜூரெல் 149 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரி உள்பட 90 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் மாறி மாறி பந்து வீசினர். இதில், அஸ்வின் வீசிய 4.5ஆவது பந்தில் பென் டக்கெட் 15 ரன்களில் சர்ஃபராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் மூலமாக இந்திய மண்ணில் தனது 350ஆவது விக்கெட்டை கைப்பற்றி சர்வதேச டெஸ்ட்டில் 503ஆவது விக்கெட் எடுத்தார். அடுத்த பந்திலேயே ஆலி போப் விக்கெட்டையும் எல்பிடபிள்யூ முறையில் கைப்பற்றினார். அடுத்து ஹாட்ரிக் விக்கெட்டிற்கு முயற்சித்த நிலையில் அதற்கு பலனில்லை. எனினும் அணில் கும்ப்ளேயின் 350 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். கும்ப்ளே 63 போட்டிகளில் 350 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், அஸ்வின் 59 டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் 350, மற்றும் 351ஆவது விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்திய மண்ணில் ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டுகளும், கபில் தேவ் 219 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 210* விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   HISTORY IN RANCHI…!!! Ravi Ashwin has taken most Test wickets in India. 🇮🇳 pic.twitter.com/bJhyYHHukn — Mufaddal Vohra (@mufaddal_vohra) February 25, 2024  

 • 2028-29க்குள் ரூ.3 லட்சம் கோடி பாதுகாப்பு உற்பத்தி: அமைச்சர் ராஜ்நாத் சிங்!
  on February 25, 2024 at 7:58 am

  டெல்லியில் தனியார் ஊடகம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 2028-29க்குள் ரூ.3 லட்சம் கோடி பாதுகாப்பு உற்பத்தி, மற்றும் ரூ. 50,000 கோடி ஏற்றுமதி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு குறுகிய கால பலன்களை அல்ல, நீண்ட கால ஆதாயங்களில் கவனம் செலுத்துகிறது” என்று அவர் கூறினார். நீண்ட ஆட்சிக்கும், நீண்ட கால ஆதாயங்களுக்கும் முன்னுரிமை அளிப்பது’ என்பது தற்போதைய அரசாங்கத்திற்கும் முந்தைய காலகட்டங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். கடந்த காலத்தைப் போல வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு குறுகிய கால ஆதாயங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தற்போதைய அரசு நீண்டகாலங்களுக்கு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் நீண்ட கால ஆதாயங்களுக்காக பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் படையின் தலைமைப் பதவியை உருவாக்குதல் மற்றும் ராணுவ விவகாரத் துறையை அமைத்தல் உள்ளிட்ட மூன்று படைகளுக்குமிடையே கூட்டுத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் சுமூகமான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை அவர் விவரித்தார். பாதுகாப்பு உற்பத்தித் துறையில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து, பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், சேவைகளின் ஐந்து நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்களில் 500 க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் நான்கு பிற பட்டியல்களை உள்ளடக்கிய, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கான 4,600 க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆகியவை  நம் படைவீரர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்! குஜராத்தில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! மூலதன கையகப்படுத்தல் பட்ஜெட்டில் 75% உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் முடிவையும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு ஆயுதங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்காது என்று சிலர் கருதுவதாக அவர் மேலும் கூறினார். இருப்பினும், உள்நாட்டுத் தொழில்துறையின் திறன்களை அரசு நம்புகிறது மற்றும் அவர்கள் தொடர்ந்து மேம்படுத்தலாம் மற்றும் அதிநவீன தயாரிப்புகளை வழங்க முடியும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தளவாடங்களிலிருந்து எந்தவொரு ராணுவமும் தனது நாட்டை பாதுகாக்க முடியாது என்றும், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு அவசியம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதால், தற்சார்புக்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்களை அமைப்பது போன்ற முன்முயற்சிகள் மூலம், நவீன ராணுவத் தளவாடங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி, நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதை அரசு உறுதிசெய்து வருகிறது என்று ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்தார். மான் கி பாத் 110ஆவது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி! “முன்பு, இந்தியா ஒரு ஆயுத இறக்குமதியாளராக அறியப்பட்டது. ஆனால் இன்று, பிரதமரின் தலைமையின் கீழ்,  ஆயுதம் ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளோம். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.1,000 கோடியை கூட எட்டவில்லை. இன்று அது ரூ.16,000 கோடியைத் தொட்டுள்ளது. 2028-29 ஆம் ஆண்டில், வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தி ரூ .3 லட்சம் கோடியையும், பாதுகாப்பு ஏற்றுமதி ரூ .50,000 கோடியையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். 2023-24 நிதியாண்டில், இதுவரை ரூ .4,35,000 கோடிக்கும் அதிகமான மூலதன கையகப்படுத்தலுக்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார். 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ராணுவத்தை உலகின் வலிமையான ஒன்றாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட அக்னிபாத் திட்டம் குறித்தும் அவர் பேசினார். இந்த முடிவுகள் தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசின் நீண்டகால அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.

 • விடுதலை படத்தின் விஸ்வரூப வெற்றிக்கு பின் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய சூரி – அதுக்குன்னு இவ்வளவா?
  on February 25, 2024 at 7:43 am

  காமெடியனாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சூரியின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானவர் சூரி. அப்படத்தில் அவர் நடித்த பரோட்டா காமெடி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதால், அவரை பரோட்டா சூரி என்றே அழைக்க தொடங்கினர். வெண்ணிலா கபடி குழு படத்துக்கு பின்னர் சூரிக்கு காமெடியனாக நடிக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் பிசியாக நடித்து வந்தார் சூரி. தமிழ் சினிமாவில் வடிவேலு நடிக்காமல் இருந்த காலகட்டத்தில் கோலிவுட்டில் காமெடி பஞ்சத்தை போக்கிய நடிகர்களுள் முக்கியமானவர் சூரி. இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், தேசிங்கு ராஜா, ஜீவா போன்ற படங்களின் காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் சூரி. காமெடி டிராக்கில் சென்றுகொண்டிருந்த சூரியை, அப்படியே ஹீரோவாக்கி அழகு பார்த்தார் வெற்றிமாறன். இதையும் படியுங்கள்… சண்டைக்கோழியாக இருந்து மீண்டும் ஜிகிரி தோஸ்த் ஆக மாறிய விஷ்ணு விஷால் – சூரி… பிரச்சனை என்ன ஆனது? அவர் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சூரி. அப்படத்தில் போலீஸாக நடித்திருந்த சூரி, தனக்குள் இருந்த யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு தரமான நடிகன் என்பதையும் நிரூபித்தார். விடுதலை படம் சூரியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி, துரை செந்தில்குமார் இயக்கியுள்ள கருடன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் சூரி. இதுதவிர விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் சூரியின் லைன் அப்பில் உள்ளது. இப்படி அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க வாய்ப்பு குவிந்து வருவதால் தன் சம்பளத்தையும் மளமளவென உயர்த்தி இருக்கிறாராம் சூரி. இதுவரை ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த அவர், கருடன் படத்தில் நடிக்க ரூ.8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்கள்… அடக்கொடுமையே… இந்த பிளாப் படத்தில் நடிப்பதற்காக தான் ராட்சசன் படத்துக்கு நோ சொன்னாராம் விக்ரம்..!

 • தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
  on February 25, 2024 at 7:35 am

  தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. இதில் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இந்த அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சியில், மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால்தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள்.” என்றார். மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மழை, வெள்ள நிவாரண பணிகள், நிதி உதவிகள்,  அம்மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார். அத்துடன், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களுடைய நலன் கருதி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சில அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, “விளாத்திகுளம் வட்டம், வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “வேம்பார் பனைப்பொருட்கள் குறுங்குழுமம்” அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம்” அமைக்கப்படும். இந்தக் குழுமத்துக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்ற வசதி, தானியங்கி பேக்கிங் கூடங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும். தூத்துக்குடியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் வர்த்தக வசதிகள் மையம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.” ஆகிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மான் கி பாத் 110ஆவது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி! அதேபோல், நெல்லை மாவட்டத்துக்கு, “அம்பாசமுத்திரத்திற்கு புதிய மருத்துவமனை கட்டடம், வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும். அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த கண்டியபேரி அரசு மருத்துவமனை பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அது விரைவில் திறக்கப்பட இருக்கிறது. மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதி கனமழையால் பெரிய பாதிப்பை அடைந்திருக்கின்ற மாஞ்சோலை சாலை 5 கோடியே 4 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும். திருநெல்வேலி மாநகருக்கான மேற்கு புறவழிச் சாலை பணிகளுக்கான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருக்கிறது.” ஆகிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி விரைவில் வழங்கப்பட்டுப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். “இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம். இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நாம் கேட்டோம். ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்பது மட்டும் இல்லை; தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம். கொஞ்சம் கூட இல்லாமல் ஒன்றிய அரசும், நிதிஅமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள்.” என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனத்தின் 16,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் வாகன உற்பத்தி ஆலை அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 • ஊதியத்தை கூட கொடுக்க முடியல! அனைத்தையும் அழிவுப் பாதைக்கு அழைத்து செல்வதுதான் திராவிட மாடலா? ஓபிஎஸ் விளாசல்!
  on February 25, 2024 at 7:14 am

  சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதிப் பற்றாக்குறையினை போக்கிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இளைய சமுதாயத்தினருக்கு அறிவு, ஒழுக்கம், உயர் கல்வி ஆகியவற்றை தரக் கூடியவையாகவும், ஆய்வினை மேற்கொள்ளக் கூடியவையாகவும், பொது நலப் பணிகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தக் கூடியவையாகவும், வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரக் கூடியவையாகவும் விளங்குபவை பல்கலைக்கழகங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இளைய சமுதாயத்தினரின் விடிவெள்ளியாக விளங்குபவை பல்கலைக்கழகங்கள். இப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களே பாதிக்கும் சூழ்நிலை கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் உருவாகியுள்ளது. இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ் நிற்க வைக்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்-இறங்கி அடிக்கும் ஓபிஎஸ் தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை காமராசர் பல்கலைக்கழகம். கடந்த இரண்டு மாதங்களாக அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கூட வழங்கப்பட முடியாத அவல நிலை நிலவுவதாகவும், இதனைக் கண்டித்து கடந்த பத்து நாட்களாக அனைத்துத் துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருவதாகவும், ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி நூற்றுக்கணக்கான தற்காலிக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், தற்போது நடைபெறும் போராட்டம் காரணமாக மாணவ, மாணவியரின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவ, மாணவியருக்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் முடங்கிப் போயுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில், மாதச் சம்பளமும், ஓய்வூதியமும் வழங்க இயலாத நிலைக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சென்றுள்ளது.  இதேபோன்று, சென்னை பல்கலைக்கழகத்திற்கு தரவேண்டிய 51 விழுக்காடு நிதியில், 20 விழுக்காட்டிற்கும் குறைவான நிதியை மட்டும் திமுக அரசு விடுவித்துள்ள நிலையில், பிப்ரவரி மாத சம்பளமே கொடுக்க முடியாத சூழ்நிலை சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள். ஊதியத்தைக் கூட கொடுக்க இயலாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் குளறுபடி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் குளறுபடி, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது சென்னை மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றின்மூலம், கல்வியில் அக்கறை இல்லாத அரசாக திமுக அரசு விளங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே நிலைமைதான் மற்ற பல்கலைக்கழகங்களிலும் நீடிப்பதாக தகவல்கள் வருகின்றன. பல்கலைக்கழகங்களுக்கான பல்வேறு கட்டணங்கள் கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டும், நிதி நிலைமை மோசமாக இருப்பது வேதனைக்குரிய செயல். இதையும் படிங்க:  எம்ஜிஆர் கையில் இருந்த சின்னம் பிஎஸ்.வீரப்பா,நம்பியார் கையில் இருப்பது போல் இபிஎஸ் கையில் உள்ளது-சீறும் டிடிவி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளதாக தனக்குத் தானே கூறிக்கொள்ளும் திமுக அரசு, எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு வேளை அனைத்தையும் அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதுதான் ‘திராவிட மாடல்’ போலும். சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதிப் பற்றாக்குறையினை போக்கிடும் வகையில், உரிய நிதியையும், மானியத்தையும் உடனடியாக வழங்கி, அங்குள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாதந்தோறும் சம்பளம் பெறவும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்தை பெறவும், மாணவ, மாணவியர்கள் பாதிப்பிலிருந்து விடுபடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 • மான் கி பாத் 110ஆவது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி!
  on February 25, 2024 at 7:07 am

  பிரதமராக மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பேற்ற பிறகு, அதே ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று, மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது மான் கி பாத்தின் 110ஆவது அத்தியாயம் ஆகும். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளது என்பதால், பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தின் கடைசி மான் கி பாத்தின் அத்தியாயம் இதுவாக இருக்க வாய்ப்புள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்ட மகளிர் தினம் குறித்து பேசினார். இந்தியாவின் பெண் சக்தி ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை எட்டுகிறது என்று அவர் கூறினார். நமது நாட்டில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் ஆளில்லா விமானத்தை பறக்க விடுவார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இன்று நமோ ட்ரோன் திதி திட்டம் மூலம் அது சாத்தியப்பட்டுள்ளது  என்றார். ட்ரோனை ஓட்டும் பெண் சுனிதாவிடம் பேசிய பிரதமர் மோடி, அவரது குடும்பம், படிப்பு மற்றும் ட்ரோன் திதி திட்டத்தின் பலன்கள் குறித்து கேட்டறிந்தார். “நாட்டின் பெண் சக்தி பின்தங்கிய எந்தத் துறையும் இன்று நாட்டில் இல்லை. பெண்கள் தங்கள் தலைமைத் திறனை வெளிப்படுத்திய மற்றொரு துறை இயற்கை விவசாயம், நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்.” என்று பிரதமர் மோடி கூறினார். 20 ஆண்டுகளில் அதிகரித்த மாதாந்திர வீட்டுச் செலவுகள்..! மேலும் பேசிய அவர், “மார்ச் 3ஆம் தேதி உலக வனவிலங்கு தினம்’. இந்த நாள் வன விலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, உலக வனவிலங்கு தினத்தின் கருப்பொருளில் டிஜிட்டல் கண்டுபிடிப்பு முதன்மையாக வைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார். “கடந்த சில ஆண்டுகளாக, அரசின் முயற்சியால், நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் புலிகள் காப்பகத்தில், புலிகளின் எண்ணிக்கை, 250க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கு இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருகின்றனர்.உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள மோட்டார் பிரசிஷன் குரூப் இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து இதுபோன்ற ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளது. இது கென் நதியில் முதலைகளைக் கண்காணிக்க உதவுகிறது.” என்று பிரதமர் மோடி கூறினார். ஒடிசாவில் உள்ள கலஹண்டியில் ஆடு வளர்ப்பு கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் முக்கிய வழிமுறையாக மாறி வருகிறது.இந்த முயற்சிக்குப் பின்னால் இருக்கும் ஜெயந்தி மஹாபத்ரா மற்றும் அவரது கணவர் பிரேன் சாஹு ஆகியோரை பிரதமர் பாராட்டினார். அத்துடன், “பீகார் மாநிலம் போஜ்பூரைச் சேர்ந்த பீம் சிங் பவேஷ் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது பணி அவரது பகுதியின் முசாஹர் சாதி மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது. முசாஹர்கள் மிகவும் பின்தங்கிய சமூகமாக உள்ளனர். பீகார். பீம் சிங் பாவேஷ் இந்த சமூகத்தின் குழந்தைகளின் கல்வியில் தனது கவனத்தை செலுத்தியுள்ளார். அவர் எட்டாயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளார்.” எனவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன், டிடி செய்திகள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் யுடியூப் சேனல்களில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

 • India vs England:இந்திய அணிக்கு பெருமை சேர்த்த துருவ் ஜூரெல் 90 ரன்களுக்கு அவுட் – 307 ரன்கள் குவித்த இந்தியா!
  on February 25, 2024 at 7:05 am

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து 353 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்துக் கொடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. இதில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா 2, சுப்மன் கில் 38, ரஜத் படிதார் 17, ரவீந்திர ஜடேஜா 12, சர்ஃபராஸ் கான் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 என்று அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 117 பந்துகள் பிடித்து 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரேல் இருவரும் நிதானமாக நின்று விளையாடி விக்கெட் சரிவிலிருந்து மீட்டு ரன்களும் குவித்தனர். இரண்டாம் நாளில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் குல்தீப் யாதவ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆகாஷ் தீப் களமிறங்கினார். ஆனால், அவருக்கு அதிக ஸ்டிரைக் கொடுக்காமல் விளையாடிய துருவ் ஜூரெல் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அதோடு சல்யூட் அடித்து தனது நன்றியை வெளிக்காட்டினார். அவருக்கு ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு தொடர்ந்து விளையாடிய அவர் ஸ்பின் பவுலிங்கை நன்றாக பயன்படுத்தி இந்திய அணியை 300 ரன்கள் எட்ட உதவினார். இதற்கிடையில் ஆகாஷ் தீப் 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஜூரெல் 90 ரன்கள் எடுத்திருந்த போது டாம் ஹார்ட்லி பந்தில் கிளீன் போல்டானார். இறுதியாக இந்திய அணி 307 ரன்கள் மட்டுமே எடுத்து 46 ரன்கள் பின்தங்கியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து அணியில் சோயிப் பஷீர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

 • Jovika: வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள்! ஸ்ட்ராப் லெஸ் உடையில்.. சைடு போஸ் கொடுத்த ஜோவிகா!
  on February 25, 2024 at 7:01 am

  வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, தற்போது பட வாய்ப்புகள் தேடுவதில் மும்முரமாக இருக்கும் நிலையில் வாய்ப்புக்காக, எல்லை மீறிய கவர்ச்சியில் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.   விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ என்கிற படத்தில் அறிமுகமானவர். எண்ணி நான்கே படங்களில் நடித்து விட்டு, தன்னுடன் நடிப்பு பயிற்சி பட்டறையில் ஒன்றாக இணைந்து படித்த ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து ஒரே அடியாக விலகிய இவர்… கணவர் ஆகாஷை விவாகரத்து செய்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக, ஜோவிகா பிறந்த கையேடு ஆகாஷை விவாகரத்து செய்து விட்டு, ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவர் மூலம் ஜெயனித்தா என்கிற மகள் ஒருவரையும் பெற்றெடுத்தார். ஜம்முனு பறந்து செல்ல… சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய பிரபலங்கள் யார்.. யார்? முழு லிஸ்ட் இதோ வனிதாவின் மகள் ஸ்ரீஹரி தற்போது அவரின் தந்தையிடம் உள்ள நிலையில், வனிதாவிடம் ஜோவிகா உள்ளார். அதே போல் ஜெயனித்தா தந்தையிடம் வளர்ந்தாலும் அவ்வப்போது தன்னுடைய அம்மாவை வந்து சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.  வனிதாவின் மகள் ஜோவிகாவுக்கு படிப்பில் மீது ஆர்வம் இல்லாததால், சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதோடு, இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகவும் இருந்து வருகிறார். இதை தவிர சில தொழில்நுட்ப பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். குஷி ஜோதிகா போல் மாறிய ஜோவிகா! சேலையில் இடுப்பழகை காட்டி.. கவர்ச்சி கோதாவில் இறங்கிய வனிதா மகள் – போட்டோஸ் இதோ சினிமா வாய்ப்புக்காக மகள் ஜோவிகாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பிய வனிதா, அவரை வெற்றிபெற வைக்க… தீயாக மாறி வேலை செய்த போதும், அது நிறைவேறாமல் போனது. 70-நாட்களிலேயே ஜோவிகா வெளியே வந்தார். தற்போது மகளை திரைப்படத்தில் கதாநாயகியாக மாற்றுவதில் குறியாக இருக்கும் வனிதா, மகளை வைத்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.  90களில் உச்சத்தில் இருந்த பிரபல நடிகை.. தயாரிப்பாளராக ஆசைப்பட்டு கடனில் மூழ்கி வீட்டை விற்ற சோகம்.. அந்த வகையில் தற்போது வயசுக்கு மீறிய கவர்ச்சியில், ஜோவிகா போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஸ்ட்ராப் லெஸ் உடையில் ஜோவிகாவை பார்ப்பதற்கு பார்பி பொம்மை போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்,

 • வெயிலுக்கு இதமாக… கலர்ஃபுல் பிகினியில் கவர்ச்சி குளியல் போட்ட ரைசா வில்சன் – வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
  on February 25, 2024 at 7:01 am

  கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரைசா வில்சன், அங்குள்ள நட்சத்திர விடுதியில் பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் கவர்ச்சி குளியல் போட்டுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் பிசியான ரைசாவுக்கு முதல் படமே ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸில் நண்பர்களாக இருந்த இவர்களும் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் காதலர்களாக நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இதையடுத்து இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு ரைசாவுக்கு கிடைத்தது. அதன்படி துருவ் விக்ரமை வைத்து அவர் இயக்கிய வர்மா படத்தில் நடித்தார் ரைசா. வர்மா திரைப்படம் சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகாமல் டிராப் ஆனது. இதையடுத்து கார்த்திக் ராஜு இயக்கத்தில் தி சேஸ் என்கிற திரைப்படத்தில் நடித்தார் ரைசா. கொரோனா லாக்டவுன் சமயத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட அப்படம், இன்னும் திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது. இதையும் படியுங்கள்… பிளாஸ்டிக் சர்ஜரி செய்து… சமந்தா ஃபேஸ்கட்டுக்கு மாறிய ரைசா? கூடுதல் கிளாமரில் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்! பின்னர் விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர், பிரபுதேவா உடன் பொய்க்கால் குதிரை, சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் போன்ற படங்களில் நடித்த ரைசா வில்சனின் கைவசம் தற்போது லவ், அலைஸ் மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்கள் உள்ளன. இந்த நிலையில், ஓய்வெடுப்பதற்காக கோவா சென்றுள்ள ரைசா, அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில், தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்தபடி கவர்ச்சி குளியல் போட்டவாரு நடிகை ரைசா வில்சன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைர்லாகி வருகிறது. கலர்புல் பிகினியில் அவர் வெளியிட்ட இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிகின்றன. இதையும் படியுங்கள்… அடக்கொடுமையே… இந்த பிளாப் படத்தில் நடிப்பதற்காக தான் ராட்சசன் படத்துக்கு நோ சொன்னாராம் விக்ரம்..!

 • முன்னாள் முதல்வரைக் கைப்பிடித்து ஆடம்பரமாக வாழும் நடிகை! சொத்து மதிப்பைக் கேட்டா தலைசுத்தும்!
  on February 25, 2024 at 6:51 am

  ராதிகா அவரை விட 27 வயது மூத்தவரான முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இப்போது அவரது சொத்து மதிப்பு 100 கோடிக்கு மேல்! திரையுலகில் பல உண்மையான காதல் கதைகள் உள்ளன. அவை ரசிகர்களின் கவனத்துக்கு வரும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 18 ஆண்டுகளுக்கு முன், ராதிகா – குமாரசாமி இடையேயான காதல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னட சினிமா தயாரிப்பாளராக மாறியிருந்த ராதிகா கடந்த 2006ஆம் ஆண்டு, ஜேடிஎஸ் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமியைத் திருமணம் செய்துகொண்டார். இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பிரகாசமாக்கியது. ஆனால் திரையுலக வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது. ராதிகா தனது ஒன்பதாம் வகுப்பை முடித்தபோது கன்னட திரைப்படமான ‘நீலா மேக ஷாமா’ (2002) மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். விஜய் ராகவேந்திராவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சிவராஜ்குமார் நடித்த ‘தவரிகே பா டாங்கி’ படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது. ஆனாலும் ராதிகாவின் சினிமா வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. ராதிகா 30 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், நடிகையாக அவரது பயணம் நின்று போனது. அவர் படங்களில் நடிக்காவிட்டாலும் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 2012ஆம் ஆண்டு யாஷ் நடித்த ‘லக்கி’ என்ற கன்னடப் படத்தைத் தயாரித்தார். ராதிகாவின் நிஜ வாழ்க்கை காதல் கதை வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு கர்நாடக முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமியை திருமணம் செய்த ரகசியம் வெளியானது. 2006ஆம் ஆண்டிலேயே ஜேடிஎஸ் தலைவர் எச்டி குமாரசாமியை திருமணம் செய்து கொண்டதாக ராதிகா வெளிப்படுத்தினார். இவர்கள் இருவருக்கும் ஷமிகா என்ற மகளும் உள்ளார். திருமணத்தின்போது குமாரசாமிக்கு 47 வயது. ராதிகா அவரை விட 27 வயது இளையவர். இது குமாரசாமியின் இரண்டாவது திருமணம். அவரது முதல் திருமணம் 1986ஆம் ஆண்டு நடந்தது. ராதிகாவுக்கும் இது இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது. அவர் 2000ஆம் ஆண்டில் ரத்தன் குமார் என்ற நபரை மணந்தார் எனவும் அந்தத் திருமண உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்றும் தெரிகிறது. எச்.டி.குமாரசாமிக்குத் தனது மகளைத் திருமணம் செய்து வைப்பதை ராதிகாவின் தந்தை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் ராதிகா குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் நீண்ட நாட்களாக தங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தனர். பின்னர் விஷயம் தெரியவந்தபோது ராதிகாவின் தந்தை மிகவும் அதிர்ச்சியடைந்தார். ராதிகா ஒரு நடிகையாக திரையுலகில் தோல்வி அடைந்தவர்தான். ஆனால் அவரது பெயர் வணிக உலகில் மிகவும் பிரபலமானது. கர்நாடக முதல்வரை மணந்த பிறகு பல கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரரானார். ராதிகாவின் சொத்து மதிப்பு ரூ.124 கோடி என்றும், அவரது கணவர் ஹெச்.டி. குமாரசாமிக்கு ரூ.181 கோடி சொத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • ஒரே ஒரு தொகுதி தான்.. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டி.! திமுகவின் நிபந்தனையால் அதிர்ச்சியில் வைகோ
  on February 25, 2024 at 6:45 am

  நெருங்கும் தேர்தல்- தொகுதி உடன்பாடு நாடாளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பாஜக தங்களது கூட்டணி கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதே போல காங்கிரஸ் கட்சியும் டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. அடுத்ததாக தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் நிலையில் உள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்கள் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணி தொகுதி உடன்பாடு அதன் படி முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற  ராமநாதபுரம் தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய  திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்தநிலையில் திமுக- மதிமுக இடையேயான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லையென கூறப்படுகிறது. மதிமுக சார்பாக இந்த முறை 2 மக்களவை ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் இந்த முறை போட்டியில்லைன்றும், தங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மதிமுகவுடன் தொடரும் இழுபறி ஆனால் இந்த கோரிக்கையை திமுக தொகுதி பங்கீட்டு குழு நிராகரித்துள்ளது. மதிமுகவிற்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்படும் எனவும், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது தொடர்பாக வைகோ, துரை வைகோ ஆகியோர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதையும் படியுங்கள் Dmk Alliance : மதிமுக- சிபிஎம்க்கு எத்தனை தொகுதி.? திமுக கூட்டணியோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?

 • அடக்கொடுமையே… இந்த பிளாப் படத்தில் நடிப்பதற்காக தான் ராட்சசன் படத்துக்கு நோ சொன்னாராம் விக்ரம்..!
  on February 25, 2024 at 6:24 am

  ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ராட்சசன் திரைப்படத்தை நடிகர் விக்ரம் நிராகரித்தது ஏன் என்பது பற்றி பார்க்கலாம். ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் ராட்சசன். இதில் அமலா பால், ரவீனா தாஹா, அம்மு அபிராமி, காளி வெங்கட், ராதா ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரில்லர் படங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அளவுக்கு தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதையால் மிரள வைத்தார் ராம்குமார். ராட்சசன் படம் ரிலீஸ் ஆன பின்னர் இப்படத்தை பார்த்த பிற மொழி பிரபலங்களும் அதன் ரீமேக் உரிமையை வாங்க வரிசைகட்டி நின்றனர். இதையடுத்து இப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பின் உள்ள வலியை அதன் இயக்குனர் ராம்குமார் பல மேடைகளில் கூறி இருக்கிறார். ஏனெனில் இப்படத்தை விஷ்ணு விஷாலுக்கு முன்னர் 17 ஹீரோக்கள் ரிஜெக்ட் செய்துவிட்டார்களாம். இதையும் படியுங்கள்… Vishnu Vishal Salary: ‘லால் சலாம்’ வெற்றியால் சம்பளத்தை மளமளவென உயர்த்திய விஷ்ணு விஷால்! முழு விவரம் இதோ! அதுமட்டுமின்றி 22 தயாரிப்பாளர்களும் நோ சொல்லிவிட்டார்களாம். அத்தனை தடைகளை தாண்டி வந்து இறுதியாக வெற்றிகண்டுள்ளது இப்படம். ஆனால் முதன்முதலில் இப்படத்தின் கதையை எழுதும்போது, இயக்குனர் ராம்குமார் மனதில் வைத்திருந்த ஹீரோ சீயான் விக்ரம் தானாம். இது முழுக்க முழுக்க அவருக்காக எழுதப்பட்ட கதையாம். அவருக்கும் கதை கேட்டு பிடித்திருந்தாலும், கால்ஷீட் பிரச்சனை காரணாமாக நோ சொல்லிவிட்டாராம் விக்ரம். விக்ரம் நோ சொன்னதும் விஷால் உள்பட பல்வேறு நடிகர்களுக்கு இந்த கதை சென்று இறுதியாக விஷ்ணு விஷாலே தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இதில் ஹீரோவாக நடித்தார். இப்படம் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இத்தகைய பொன்னான வாய்ப்பை சீயான் விக்ரம் தவறவிட்டதற்கு காரணமே சாமி ஸ்கொயர் திரைப்படம் தானாம். ஹரி இயக்கத்தில் உருவான அந்த பிளாப் படத்தில் நடிப்பதற்காக இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறார் விக்ரம். இதையும் படியுங்கள்… வரிசையாக ரஜினியின் 4 படங்களை நிராகரித்து… சூப்பர்ஸ்டாருக்கே தண்ணிகாட்டிய ஐஸ்வர்யா ராய்! அதுல 3 வேறலெவல் ஹிட்

 • 20 ஆண்டுகளில் அதிகரித்த மாதாந்திர வீட்டுச் செலவுகள்..!
  on February 25, 2024 at 6:20 am

  கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் சராசரி மாதச் செலவுகள் கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இடைப்பட்ட ஆண்டுகளில் கிராமப்புற நுகர்வு அதிகரித்து, நகர்ப்புற நுகர்வுக்கும், கிராமப்புற நுகர்வுக்கும் இடையேயான இடைவெளி குறைந்துள்ளது என்பதை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2022-23இல் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவு (MPCE) கிராமப்புற இந்தியாவில் ரூ.3,773 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.6,459 ஆகவும் இருந்தது. இதன் மூலம், 2011-12ல் 83.9% ஆகவும், 2009-10ல் 88.2% ஆகவும், 2004-05ல் 90.8% ஆகவும் இருந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற செலவுகளின் இடைவெளி 71.2% ஆகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி பார்த்தால், கடந்த 18 ஆண்டுகளில், கிராமப்புறங்களில் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது தெரியவருகிறது. இது நகர்ப்புறங்களை விட அதிகமாக உள்ளது. அதாவது, 2004-05இல் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவானது கிராமப்புறங்களில் ரூ.579 ஆகவும், நகர்ப்புறத்தில் ரூ.1,105 ஆகவும் இருந்தது. தற்போதைய வளர்ச்சியை பார்க்கும்போது, கிராமப்புறங்களில் 552% மற்றும் நகர்ப்புறங்களில் 484% ஆகவும் செலவு அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களின் சராசரி அதிகரித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு இடையே வீட்டு உபயோக செலவினக் கணக்கெடுப்பு (HCES) நடத்தப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, சில்லறை பணவீக்கம் மற்றும் வறுமை நிலைகள் போன்ற முக்கியமான பொருளாதார குறியீட்டின் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவின் கிராமப்புற மக்கள்தொகையில் அடிமட்டத்தில் இருக்கும் வர்க்கத்தினரில் 5 சதவீதம் பேரின் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவு ரூ.1,373 ஆகவும், நகர்ப்புறங்களில் அதே பிரிவில் ரூ.2,001 ஆகவும் உள்ளது. அதுவே, மேல்மட்ட வர்க்கத்தில் இருக்கும் 5 சதவீதம் பேரின் சராசரி தனிநபர் மாதாந்திர வீட்டு உபயோகச் செலவு கிராமப்புறங்களில் ரூ.10,501 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.20,824 ஆகவும் உள்ளது. கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு! வெவ்வேறு மாநிலங்களில் உள்ள செலவினங்களின் ஒப்பீட்டு ஆய்வில், சிக்கிமில் மிக அதிகமாகவும் (கிராமப்புறம் ரூ.7,731, நகர்ப்புறம் ரூ.12,105) சத்தீஸ்கரில் குறைவாகவும் (கிராமப்புறம் ரூ. 2,466, நகர்ப்புறம் ரூ.4,483) உள்ளது. சராசரி மாதாந்திர உணவு செலவுகள் ரூ.1,750 (கிராமப்புறம்), ரூ.2,530 (நகர்ப்புறம்) மற்றும் உணவு அல்லாத செலவுகள் ரூ.2,023 (கிராமப்புறம்), ரூ.3,929 (நகர்ப்புறம்) என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.  ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் குடும்ப நுகர்வு செலவின ஆய்வுகள் நடத்தப்படுகின்றன, ஆனால் தரவு சிக்கல்கள் காரணமாக 2017-18இல் தரவு வெளியிடப்படவில்லை. கடைசியாக 2011-12 ஆம் ஆண்டில் பொது கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

 • இந்தியாவில் முதன்முறையான தோள்பட்டை,முழங்கை மணிக்கட்டு பிரச்சனைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம்! எங்கு தெரியுமா?
  on February 25, 2024 at 6:17 am

  தோள்பட்டை, முழங்கை மணிக்கட்டு மற்றும் கையை பாதிக்கும் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும்  சிறப்பு மையம் இந்தியாவில் முதன்முறையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மனிதனின் விளையாட்டு மற்றும் அன்றாட நடைமுறைகளை செயல்படுத்த கைகள் மிக முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக தோள்பட்டையில் அமைந்துள்ள பந்து போன்ற மூட்டு, கைகளை 360 டிகிரிக்கு சுழற்றவும், வேலைகளை செய்யவும் உதவுகிறது. அதேபோல் மணிக்கட்டு மற்றும் முழங்கையில் உள்ள எலும்புகளும் மிக முக்கியமானது. ஆனால் இந்தியாவில் இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று அறுவை  சிகிச்சை குறித்து மக்களிடையே நன்கு விழிப்புணர்வு உள்ளது.  தோள்பட்டை மற்றும் முழங்கை சம்பந்தமான சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. மருத்துவர்கள் மற்றும் பொது எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சையின் நன்மைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தற்போது சென்னையில் பிரபல மருத்துவரான ராம் சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள  சென்னை UPPER LIMB UNIT- மருத்துவ மையத்தில், தோள்பட்டையின் எலும்பு, குருத்தெலும்பு அல்லது தசைகள் மோசமாக தேய்ந்து போனாலோ அல்லது கிழிந்தாலோ, உலகத்தரத்தில் அதிநவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி, பாதிக்க மூட்டுகளையே மாற்ற முடியும்.  இதுகுறித்து மருத்துவர் ராம் சிதம்பரம் கூறுகையில்:  “CHENNAI UPPER LIMB UNIT-ல் தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை ஆகியவற்றின் மூட்டுகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படும். தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை எலும்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகத் தரத்திலான சிகிச்சையை வழங்குவதே எங்களுடைய நோக்கம். தோள் பட்டை மூட்டுகளில் தேய்மானமோ, டிஸ்லோகேஷனோ ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கமானது. ஆனால் எங்களுடைய மையத்தில் மோசமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தோள் பட்டை மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.  

பிரேக்கிங் நியூஸ், விளையாட்டு, டிவி, ரேடியோ மற்றும் பல. சர்வதேச செய்திகள் முதல் தேசியச் செய்திகள், அரசியல் முதல் சமூகம், பாதுகாப்பு முதல் தற்போதைய விவகாரங்கள், தொழில்நுட்பச் செய்திகள் முதல் பொழுதுபோக்குச் செய்திகள் வரை உள்ளடக்கிய IOB செய்தி வலையமைப்பு, ஒவ்வொரு செய்தி கவரேஜும் பாரபட்சமற்றது, அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்யப்பட்டது, நம்பகமானது மற்றும் நம்பகமானது. IOB நியூஸ் நெட்வொர்க் தகவல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு – நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் வயது என்னவாக இருந்தாலும்.