May 8, 2024

Tamil

நேரலை செய்திகள் புதுப்பிப்புகள்

  • பார்க்கும்போதே எச்சு ஊறுதே… அடுப்பே இல்லாமல் ரம்யா கிருஷ்ணன் ரெடி பண்ணிய டேஸ்டான ரெசிபிக்கு குவியும் லைக்ஸ்
    on May 8, 2024 at 4:57 am

    ஹீரோயினாக மட்டுமின்றி வில்லி வேடங்களிலும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தமிழில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது படையப்பா தான். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் நீலாம்பரி என்கிற கேரக்டரில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடித்து அசத்தி இருந்தார் ரம்யா கிருஷ்ணன். அப்படத்தின் வெற்றிக்கு இவரது நடிப்பும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து கமல்ஹாசனுடன் பஞ்ச தந்திரம் படத்தில் மேகியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் பல்வேறு சூப்பர்ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருந்தார். இவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் ஆனது. தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ணா வர்மா என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு மகனும் உள்ளார்.  இதையும் படியுங்கள்… 43 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி… இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா? திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார் ரம்யா கிருஷ்ணன். அந்த வகையில் சன் டிவியில் இவர் நடித்த தங்கம், வம்சம் ஆகிய சீரியல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதோடு, அவருக்கு பாராட்டுக்களும் கிடைத்தது. பின்னர் குயின் என்கிற வெப்தொடரில் நடித்த ரம்யா கிருஷ்ணன், தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று செம்ம வைரலாகி வருகிறது. ஆவக்காய் பச்சடி செய்யும் வீடியோவை ரம்யா கிருஷ்ணன் பதிவிட்டு இருக்கிறார். அடுப்பே இல்லாமல் அவர் சமைப்பதை பார்த்த நெட்டிசன்கள் பார்க்கும் போதே எச்சில் ஊறுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ரம்யா கிருஷ்ணனின் இந்த வீடியோவுக்கு லைக்ஸும் குவிந்த வண்ணம் உள்ளது.         View this post on Instagram                       A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) இதையும் படியுங்கள்… Jawan : ஹாலிவுட் படங்களுடன் போட்டி… ஆஸ்கருக்கு நிகரான விருதுக்கு தேர்வான அட்லீயின் ஜவான் – குவியும் பாராட்டு

  • BJP : தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்எல்ஏ காலமானார்.! இரங்கல் தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள்
    on May 8, 2024 at 4:54 am

    பாஜக முன்னாள் எம்எல்ஏ காலமானார் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக கால் பதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல தேர்தலை எதிர்கொண்டு தோல்வி அடைந்தாலும், தமிழகத்தில் இருந்து பாஜக சார்பாக முதல் சட்டமன்ற உறுப்பினர் சி.வேலாயுதம் ஆவார். இவர் கடந்த 1996ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது பதவி காலத்தில் அப்பகுதி மக்களின் நல திட்டங்களுக்காக பல்வேறு வகையில் உழைத்துள்ளார். குறிப்பாக ராமர் கோயில் கட்டுவதற்கான ஆதரவு கோரி கையெழுத்து இயக்கத்தையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அரசியல் தலைவர்கள் இரங்கல் இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார். இது தொடரபாக தமிழக பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த ஸ்வயம் சேவகரும், சமூக சேவகருமாகிய திரு.C.வேலாயுதம் அவர்கள்  காலமானார். இவர், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த ஸ்வயம் சேவகரும், சமூக சேவகருமாகிய திரு.C.வேலாயுதம் அவர்கள் காலமானார். இவர், 1996 தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்ற வேட்பாளர் ஆவார்..!… pic.twitter.com/yES8IlJxSm — BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 8, 2024   1996 தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்ற வேட்பாளர் ஆவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மறைந்த சட்டமன்ற உறுப்பினர் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை! குளு குளு சூழலால் மனம் குளிர்ந்த மக்கள்!

  • Today Gold Rate In Chennai: மக்களே தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
    on May 8, 2024 at 4:45 am

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம். தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கு விற்பனையானது. Gold Rate in Tamilnadu இன்றைய (மே 08) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,630-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,100ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.56,800-ஆக விற்பனையாகிறது.  வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.88.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.88,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • ரசிகர்களுக்கு சிக்சருன்னு தெரியுது, நடுவருக்கு தெரியலயா? சாம்சன் அவுட் சர்ச்சை – டிரோல் செய்த நெட்டிசன்கள்!
    on May 8, 2024 at 4:32 am

    ரசிகர்களுக்கு சிக்ஸருன்னு தெரிந்த விஷயம் கூட நடுவருக்கு தெரியல்லையா? என்று நெட்டிசன்கள் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். நேற்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 56ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.   எல்லாரும் அம்பையர திட்டிட்டு இருக்காங்க ஆனா ஐபிஎல் ஒரு ட்ராமா அவங்க எழுதி வச்சு பிளான் பண்ணி நடத்துறாங்க#IPLCricket2024 🤡#DCvsRR pic.twitter.com/sdIQ3YBOK2 — 🎤திருச்சிக்காரன்🎤 (@silenttwits) May 7, 2024   பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். எனினும், பராக் ஒரு பவுண்டரி 3 சிக்சர் உள்பட 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.   He is clearly touching the cushion…Robbed a well deserved century for sanju samson.!!! #DCvsRR #IPL2024 #SanjuSamson pic.twitter.com/3L1s35GGuv — Harendra dudi (@Harendradudi25) May 7, 2024   ஒருபுறம் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டி விளையாடி சாம்சன் கடைசியில் 46 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 86 ரன்கள் எடுத்து சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் அவுட்டில்லை என்பது தெளிவாக தெரிகிறது. முகேஷ் குமார் ஓவரில் சாம்சன் பந்தை தூக்கி அடித்தார். அங்கு பவுண்டரி லைனில் நின்றிருந்த ஷாய் ஹோப் சர்ச்சையான முறையில் கேட்ச் பிடித்தார். கள நடுவரிடம் முறையிட்டும் பலனில்லாமல் கடைசியில் நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து ஷுபம் துபே 25 ரன்னிலும், டோனோவன் ஃபெரேரா 1 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் ரோவ்மன் பவல் 13 ரன்களில் ஆட்டமிழக்கவே ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் கலீல் அகமது, முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அக்‌ஷர் படேல் மற்றும் ரசீக் தர் சலாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த நிலையில் தான் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர். நடுவரை விமர்சனம் செய்து எக்ஸ் பக்கங்களில் விமர்சனம் செய்துள்ளனர்.   The level of umpiring is utter nonsense in IPL!! Feeling for Sanju Samson. This was a clear Six! #DCvsRR#SanjuSamson #RRvDC #RajasthanRoyals pic.twitter.com/ve6shmbVuc — مكتب الاستقدام الهند مومباي (@mktbistqdm30) May 7, 2024     This is so disappointing. The decisions by umpires in this season are below average. Sanju Samson catch was not clean. He has been given out without examining the catch properly ..!!#RRvDC #DCvRR #RRvsDC #DCvsRR #IPL2024 #IPLUpdate #RishabhPant #TATAIPL #IPLCricket2024… pic.twitter.com/DkCvPsQtQL — Cricflip (@cric_flip) May 7, 2024     Sanju is the most unlucky player… Given out unfairly 🥺😔… Worst umpiring 🤬 #DCvsRR #sanju pic.twitter.com/Q2AH4kn6kq — IAmAbinash (@IAmAbinash10) May 7, 2024     Sanju Time to recreate this Because powell is in your team now #DCvsRR pic.twitter.com/oTOAgDRSPt — Sinsinwar (@jatonthetop) May 7, 2024     3rd Umpire can take more time before making final conclusion, he even can check it from more than 2 angles , Sanjay Samson 💔💔 #DCvsRR pic.twitter.com/2MHvIkXE6o — Aisha 🇮🇳 (@itsssAisha) May 7, 2024     Feeling for sad Sanju Samson, This was a clear Six..!, That’s unfair..#DCvsRR#IPLCricket2024 pic.twitter.com/fRcgDwhghV — urooj fatima (@YasirAkhan9547) May 7, 2024     That’s an interesting idea! Using zing ropes instead of boundary skirting could indeed reduce errors and controversies related to close calls. It could provide a clearer indication of whether the foot has touched the boundary or not.#RRvDC#DCvsRR#SanjuSamson @rajasthanroyals pic.twitter.com/ZYTBxV3qQR — Utkarsh Yadav (@yaduvanshi_001) May 7, 2024  

  • வைகாசி விசாகம் 2024 எப்போது..? தேதி, நேரம் குறித்த தகவல்கள் இதோ!
    on May 8, 2024 at 4:30 am

    திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாகும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. அதிலும் குறிப்பாக விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று ‘வைகாசி விசாகம்’ திருவிழா ஆகும். வைகாசி விசாகம் திருவிழா 2024 எப்போது? 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு 2024 மே 16 ஆம் தேதி வியாழன்கிழமை அன்று ஆரம்பம் ஆகிறது. அந்நாளில், பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. சுவாமி வீதி உலா:  இந்த திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.  இதையும் படிங்க: பழனி முருகன் கோவிலுக்கு போறீங்களா? அப்படினா கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்! திருக்கல்யாணம்: இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது. அந்நாளில், மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதனை அடுத்து, மறு நாள் அதாவது மே 22ஆம் தேதி புதன்கிழமை அன்று வைகாசி விசாக தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.  இதையும் படிங்க: முருகப்பெருமானுக்கு ஏன் 2 மனைவிகள்..? சுவாரஸ்யமான காதல் கதை இதோ..!! கலை நிகழ்ச்சிகள்: வைகாசி விசாக திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர். பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம்: இதனிடையே, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அக்னி நட்சத்திர குழு சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் கடைபிடிக்கப்படும். இந்த நாட்களில் காலை, மாலை என நேரங்களில் பக்தர்கள் பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம் வருவது வழக்கம்.  அதன்படி, இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திர குழு நேற்று (மே.07) முதல் தொடங்கி மே 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கிரிவலம் வரும் அந்நாட்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

  • Tamil Nadu Weather update: ஜெய் ஜக்கம்மா! நல்ல காலம் பொறக்கப் போகுது.. கோடையில் கொட்டப் போகுது மழை!!
    on May 8, 2024 at 4:25 am

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வந்தது. வழக்கமாக மே மாதத்தில் தொடங்கும் கோடை வெப்பம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.  வெப்பத்தின் தாக்கத்தால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி விட்டனர். அரசு தரப்பிலும் பகல் நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். போதாத குறைக்கு கத்திரி வெயிலும் தொடங்கி விட்டதால் அனல் காற்று நெருப்பாக வீசியது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தாலும் தமிழகத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வந்தது.  இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை! குளு குளு சூழலால் மனம் குளிர்ந்த மக்கள்! இந்நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மென்  வெயில் குறையப்போகுது என தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஜெய் ஜக்கம்மா… நல்ல காலம் பிறக்குப்போகுது. வெயில் குறையப்போகுது, தமிழ்நாட்டில் நல்ல மழை வரப்போகுது என கூறியுள்ளார். இதையும் படிங்க:  அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை ஊத்தப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்!

  • Jawan : ஹாலிவுட் படங்களுடன் போட்டி… ஆஸ்கருக்கு நிகரான விருதுக்கு தேர்வான அட்லீயின் ஜவான் – குவியும் பாராட்டு
    on May 8, 2024 at 4:19 am

    அட்லீ இயக்கத்தில் வெளியாகி பாலிவுட்டில் பட்டைய கிளப்பிய ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ஆஸ்கருக்கு நிகரான விருதுக்கு தேர்வாகி இருக்கிறது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்று நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். ஜவான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்தாண்டு திரைக்கு வந்தது. பாலிவுட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. ஜவான் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து அப்படத்திற்கு விருதுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது சர்வதேச அளவில் ஜவான் படத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதையும் படியுங்கள்… Kovai sarala: அப்பா இறந்ததுக்கு கூட போகல.. பணத்துக்காக இப்படி செய்தாரா கோவை சரளா – அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் உலகளவில் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான டாரஸ் வேர்ல்டு ஸ்டண்ட் அவார்ட்ஸ் விருதுக்கு ஜவான் படம் தேர்வாகி இருக்கிறது. ஆஸ்கருக்கு நிகரான விருதாக இது கருதப்படுகிறது. இந்த விருது முழுக்க முழுக்க ஸ்டண்ட் கலைஞர்களுக்காக வழங்கப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்ற படங்கள் தேர்வுசெய்யப்பட்டு அதற்காக பல்வேறு பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருது விழா வருகிற மே 11-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த விருது விழாவுக்கு முதன்முறையாக இந்திய திரைப்படமான ஜவான் தேர்வாகி இருக்கிறது. ஜான்விக் 4, மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்களுக்கு போட்டியாக ஜவான் படமும் நாமினேட் ஆகி உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ஜவான் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு, அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொண்டார். அவர் விருது வெல்ல ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதையும் படியுங்கள்… 43 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி… இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா?

  • ஊட்டி, கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா.? கிளைமேட் எப்படி இருக்கு.? வெயிலா.? கூலிங்கா.? இதோ லேட்டஸ்ட் அப்டேட்
    on May 8, 2024 at 4:12 am

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளுமையான இடங்களை தேடி மக்கள் செல்லும் நிலையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வானிலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்   வாட்டி வதைக்கும் வெயில் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அனல் காற்றானது வீசுகிறது.  இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மேலும் பள்ளியில் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் மொபைல் போனை தொடர்ந்து பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வெளியூருக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். ஊட்டி, கொடைக்கானல் வானிலை எப்படி,? வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற பல இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து கோவைக்கு செல்கின்ற ரயில்களில் அனைத்துமே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.  இன்னும் ஒரு மாதத்திற்கு காத்திருப்போர் பட்டியல் மட்டுமே உள்ளது. அதையும் மீறி பேருந்து மற்றும் வாகனங்களை செல்பவர்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தற்போது கிளைமேட் எப்படி உள்ளது வெயிலின் தாக்கம் உள்ளதா கூலிங்காக உள்ளதா என்ற குழப்பமான நிலை உள்ளது. ஊட்டி வானிலை நிலவரம் இந்த நிலையில் தான் ஊட்டி, கொடைக்கானலுக்கு அதிகமான மக்கள் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் திட்டமானது தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது அந்த வகையில் மே மாதம் 7ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை இபாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டியில் தற்போது உள்ள வானிலையை பொறுத்தவரை  கடந்த சில நாட்களாக வெயிலானது ஊட்டியையும் விட்டு வைக்கவில்லை. சமதள பகுதியை போல் ஊட்டியிலும் 29 டிகிரி வரை வெயிலின் தாக்கமானது பதிவாகி இருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது ஊட்டியில் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கமானது படிப்படியாக குறைந்துள்ளது.  கூலிங்கான ஊட்டி இன்றைய காலை நிலவரப்படி ஊட்டியானது மிகவும் கூலிங்காக உள்ளது. மேகமூட்டத்துடன் இதமான வானிலையாக உள்ளது.  இரவு நேரத்தில் கூலிங் ஆனது இன்னும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.  தமிழக அரசால் இயக்கப்படும் சர்க்யூட் பஸ் மூலமே முக்கியமான இடங்களுக்கு சென்று சுற்றுலாப் பணிகள் இடங்களை சுற்றி பார்க்க வேண்டிய நிலை உள்ளது.  குளு குளு கொடைக்கானல் கொடைக்கானலில் பொறுத்தவரை இ பாஸ் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல் நாள் என்பதால் இபாஸ் எப்படி பெறுவது என்பது தெரியாமல் கொடைக்கானலில் வந்தவர்கள் தவிக்கும் நிலை உருவானது. கொடைக்கானலில் உதகையையை  விட அதிகமான கூலிங் உள்ளது.   சூப்பர் கிளைமேட் காலை நேரத்தில் இதமான வானிலையும்,  மதிய நேரத்தில் சற்று வெயிலும் அடிக்கிறது. இரவு நேரத்தில் குளிர்ச்சி அதிகமாக இருப்பதாக கொடைக்கானல் வாசிகள் தெரிவித்து வருகிறனர். எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கு தற்பொழுது சரியான காலமாக இருப்பதாகவே கூறப்படுகிறது சுட்டெரிக்கும் வெயிலால் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.? ஒரு கிலோ கேரட், பீன்ஸ் என்ன விலை தெரியுமா.?

  • எப்போதுமே உலகின் பணக்கார இந்திய தொழிலதிபர் இவர் தான்.. அம்பானி, அதானிலாம் கிட்ட கூட நெருங்க முடியாது..
    on May 8, 2024 at 4:08 am

    முகலாய காலத்தில் ஒரு முக்கிய தொழிலதிபரான விர்ஜி வோரா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் உலகளவில் பணக்கார வணிகராகப் போற்றப்பட்டவர். வரலாறு முழுவதுமே, இந்தியர்கள் பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். நாடு சுதந்திரம் அடையும் முன்பே,   ஏராளமான வெற்றிகரமான தொழில்முனைவோர் உருவாகியுள்ளனர். அந்த வகையில் முகலாய காலத்தில் ஒரு முக்கிய தொழிலதிபரான விர்ஜி வோரா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் உலகளவில் பணக்கார வணிகராகப் போற்றப்பட்டவர். விர்ஜி வோரா 1617 முதல் 1670 வரை, கிழக்கிந்திய கம்பெனியின் குறிப்பிடத்தக்க நிதி ஆதரவாளராக இருந்தார் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. 1590 இல் பிறந்த விர்ஜி வோரா தனது வாழ்நாளில் கணிசமான செல்வத்தைச் சேர்த்தார், அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 8 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.. இதன் மூலம் அவர் வாழ்ந்த காலத்தில் பணக்கார இந்திய தொழிலதிபராக அவர் மாறினார்..  மிளகு, தங்கம் மற்றும் ஏலக்காய் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் அவரின் வணிகம் பரவியது.. 1629 முதல் 1668 வரை ஆங்கிலேயர்களுடனான விர்ஜி வோராவின் நெருங்கிய உறவுகள் அவரது வணிகப் பேரரசின் விரிவாக்கத்திற்கு உதவியது. வோராவின் மூலோபாயம் பெரும்பாலும் முழு தயாரிப்புப் பங்குகளையும் ஏகபோகமாக்கி, கணிசமான லாபத்தில் விற்பதை உள்ளடக்கியது.   கூடுதலாக, வோரா ஒரு நிதியுதவியும் வழங்கினார். தனியார் நிறுவனங்களை நிறுவ விரும்பும் ஆங்கிலேயர்களுக்கு நிதி உதவி வழங்கினார். முகலாய பேரரசர் ஔரங்கசீப் தனது தக்காணப் பிரச்சாரத்தின் போது நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டபோது, முகலாய மன்னர் ஷாஜஹானுக்கு நான்கு அரேபிய குதிரைகளை பரிசாக அளித்த விர்ஜி வோராவிடம் உதவி கோரினார் என்று வரலாறு கூறுகிறது.

  • Kovai sarala: அப்பா இறந்ததுக்கு கூட போகல.. பணத்துக்காக இப்படி செய்தாரா கோவை சரளா – அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்
    on May 8, 2024 at 3:32 am

    நடிகை கோவை சரளா, தனது தந்தை இறந்ததுக்கு கூட செல்லாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் மிகவும் குறைவு. அதிலும் காமெடி நடிகையாக நடித்து புகழ்பெற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த பட்டியலில் மனோரமாவுக்கு அடுத்தபடியாக காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கோவை சரளா. இவர் 9-ம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் வெள்ளி ரத்னம். இதையடுத்து 10-ம் வகுப்பு படிக்கும்போதே 32 வயது கர்ப்பிணிப்பெண்ணாக முந்தானை முடிச்சு படத்தில் நடித்தார் கோவை சரளா. இதையடுத்து கமலுடன் சதி லீலாவதி, வடிவேலு ஜோடியாக விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா போன்ற படங்கள் கோவை சரளாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை கோவை சரளா, 62 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தற்போது தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார் கோவை சரளா. இதையும் படியுங்கள்… 43 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி… இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா? காஞ்சனா படங்களில் ராகவா லாரன்ஸின் அம்மாவாக நடித்து அசத்திய இவர், அண்மையில் வெளிவந்த அரண்மனை 4 படத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தார். இந்த நிலையில், நடிகை கோவை சரளா, தான் தன்னுடைய தந்தையின் மறைவுக்கு கூட செல்லாததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதன்படி, கோவை சரளா படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தபோது அவரது தந்தை இறந்துவிட்டாராம்.  தந்தை இறந்த செய்தி கேட்டும் அவர் செல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம். ஏனெனில் அவர் நடிக்கும் படத்தை சின்ன தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்து வந்ததாம். தான் சென்றுவிட்டால் அவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தந்தை மறைவுக்கு கூட செல்லாமல் அவர் ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்றாராம். அவர் பணத்திற்காக தான் இப்படி செய்தார் என்று அந்த சமயத்தில் தன்னை விமர்சித்தார்கள் என்று வருத்தத்துடன் கூறி இருக்கிறார் கோவை சரளா. இதையும் படியுங்கள்… Nayanthara Photos: கலக்கலான பார்ட்டி வேர் அணிந்து கடற்கரையில் காதல் கணவர் விக்கியுடன் நயன்! வைரலாகும் போட்டோஸ்

  • சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை! குளு குளு சூழலால் மனம் குளிர்ந்த மக்கள்!
    on May 8, 2024 at 3:10 am

    தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்டோர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.  ஒருபுறம் வெயில் என்றால் மறுபுறம் அனல்காற்று நெருப்பாக வீசியது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க கோடை மழை எப்போது வரும் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் காத்து கிடந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.  இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், அசோக் நகர், அடையாறு, மயிலாப்பூர், வடபழனி, தாம்பரம், வண்ணாரப்பேட்டை, நந்தனம், ராமாபுரம், தாம்பரம், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை ஊத்தப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்! அதேபோல் திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் மற்றும் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி,  காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம், சித்தலிங்கமடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.  கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், அதிகாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • 11வது பயர்பாக்ஸ் MTB போட்டிகள் : 45 நகரங்களை சேர்ந்த 140 மவுண்ட பைக்கர்கள் பங்கேற்பு..
    on May 8, 2024 at 3:03 am

    Firefox MTB ஷிம்லாவின் 11வது பதிப்பு சிம்லா மலையில் இருந்து தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் ஹீரோ MTB சிம்லாவில் புதிய மலைப்பாங்கான, சாகசப் பாதை மட்டுமின்றி, ஒட்டுமொத்த முக்கிய பார்வையாளர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் எண்ணற்ற ஆர்வமுள்ள ரைடர்களின் பங்கேற்பால் தனித்து நிற்கிறது. 130 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயம் 2 நாட்கள் நடைபெறும். ரைடர்கள் ஜீப் சாலைகள், ஒற்றைப் பாதைகள் மற்றும் காடு ஏறுதல் போன்றவற்றில் 3000 செங்குத்து மீட்டர்கள் ஏறி சாகசம் செய்ய உள்ளனர்.. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் 11 நகரங்களில் ( ஜெய்ப்பூர் , குர்கான் , ஹல்த்வானி , சென்னை , திருச்சூர் , குவஹாத்தி , இட்டாநகர் , ஸ்ரீநகர் , புனே , மைசூரு ) 11 பந்தயங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. முற்றிலும் புதிய பாதை மற்றும் வடிவம்: கிராஸ் கன்ட்ரி மராத்தான் மற்றும் கிராஸ் கன்ட்ரி ஒலிம்பிக் பாணியில் இந்த பந்தயம் நடத்தப்பட உள்ளது மற்றும் பெயரிடப்படாத நிலப்பரப்புகளின் வழியாக செல்லும். குஃப்ரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் சைல் வனவிலங்கு சரணாலயம் மற்றும் மஷோப்ராவின் அழகிய காடுகளின் வனப் பாதைகள் வழியாக இந்த பந்தயம் நடைபெறும்.. இந்த ஆண்டு பந்தயத்தில் இந்தியா முழுவதும் உள்ள 45 நகரங்களில் இருந்து 140 ரைடர்கள் பங்கேற்பார்கள். இந்தியாவில் மவுண்டன் பைக்கிங் பந்தயத்தில் இவ்வளவு அதிமானோர் கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும். சிம்லாவில் இருந்து 16 தடகள வீரர்களும், ஜெய்ப்பூரில் இருந்து 12 பேரும், குர்கானில் இருந்து 10 பேரும், டேராடூனில் இருந்து 10 பேர் மற்றும் சென்னையில் இருந்து 7 பேர் கலந்து கொள்ள உள்ளனர். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ; 19 வயதுக்குட்பட்ட ஆண்கள்; எலைட் ஆண்கள், மாஸ்டர்ஸ் ஆண்கள், கிராண்ட் மாஸ்டர்ஸ் ஆண்கள்; பெண்கள் உயரடுக்கு மற்றும் பெண்கள் மாஸ்டர்கள் என இந்த பந்தயம் 7 பிரிவுகளில் நடைபெறும்.  இதுவரை இல்லாத வகையில் அதிக பெண் ரைடர்கள் பங்கேற்கின்றனர். இந்த பந்தயத்தில் ஒடிசாவை சேர்ந்த 11 வயது தனுஷ் கோஹ்லி இள வயது போட்டியாளராக கருதப்படுகிறது. இந்த பந்தயத்தில் இளைய பெண்: சிம்லாவைச் சேர்ந்த திவிஜா சூட்; பந்தயத்தில் அதிக வயதான வீரர் 63 வயது நிஜாமுதீன் என்பவர் பங்கேற்கிறார். MTB சிம்லா 2023 போட்டியின் வெற்றியாளர் ராஜ்பீர் சிங், ராகேஷ் ராணா MTB சிம்லா போட்டியின் 3 முறை வெற்றியாளர்,  2 முறை தேசிய தங்கப் பதக்கம் மற்றும் MTB சிம்லாவில் 3 முறை வென்றவர் அக்ஷித் கவுர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இளம் MTB திறமையாளர்களை ஊக்குவிக்க அனைத்து தேசிய மேடை வெற்றியாளர்களுக்கும் அனுமதி இலவசமாகும். இந்தியாவில் திறமைகளை மேம்படுத்துவதற்காக 50 விளையாட்டு வீரர்கள் சாலை வழியாக இமயமலை பந்தயங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் பயர்பாக்ஸ் பைக்குகள் இந்தியாவின் மிகப்பெரிய பிரீமியம் சைக்கிள் பிராண்டாகும், மேலும் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியாவில் சைக்கிள் ஓட்டுவதை மக்கள் பார்க்கும் விதத்தை மாற்றியுள்ளது. HASTPA மற்றும் firefox ஆகியவை முதன்முறையாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் சைக்கிள் ஓட்டுவதற்கு ஒன்றாக வருகின்றன. மகுச்சோவின் நடிகரும் நிறுவனருமான குல் பனாக் இதுகுறித்து பேசிய போது “இந்தியா முழுவதும் சைக்கிள் ஓட்டுதல் அனுபவங்களைத் தெரிந்துகொள்ள மகுச்சோவுடன் நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம். நாடு முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு க்யூரேட்டட் ரைடுகளை கொண்டு வரவும், அனைவருக்கும் சைக்கிள் ஓட்டும் வசதியை ஏற்படுத்தவும் பயர்பாக்ஸ் பைக்குகளுடன் இணைந்து பணியாற்றுவதில் மகுச்சோவில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மகுச்சோ என்பது மலிவு, நிலையான மற்றும் ஆரோக்கியமான நல்ல தேர்வுகளை எடுப்பதில் மக்களுக்கு உதவுவதாகும்” என்று தெரிவித்தார். பயர்பாக்ஸ் பைக்குகளின் தலைமை நிர்வாக அதிகாரி பேசிய போது, “ஒரு பிராண்டாக பயர்பாக்ஸ் பைக்குகள் இந்தியாவில் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் மவுண்டன் பைக்கிங்கை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளன. சிறந்த சைக்கிள் ஓட்டும் திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமையை வெளிக்கொணர இலவச மற்றும் நியாயமான தளத்தை வழங்குவது என்ற ஒரே நோக்கத்துடன் இந்தியா முழுவதும் 11 நகரங்களுக்கு இமயமலைக்குச் சென்றோம். பயர்பாக்ஸ் எம்டிபி சிம்லா என்பது இமயமலைப் பந்தயங்களுக்கான பாதையின் உச்சக்கட்டமாகும், அங்கு இந்தியாவில் சிறந்தவர்கள் இறுதிப் பெருமைக்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுவார்கள். இந்திய சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்களுக்காக எங்களிடம் பெரிய லட்சியங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளன. மேலும் அவர்கள் மேல் மட்டத்தில் செயல்படத் தேவையான அனைத்து கருவிகளும் அவர்களிடம் இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம். ஹிமாலயன் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் & டூரிசம் புரமோஷன் அசோசியேஷன் அமைப்பின் தலைவர் மோகன் சூட் பேசிய போது “ இந்தியா முழுவதும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களின் பதிலால் நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம். 45 நகரங்களில் இருந்து 140 ரைடர்கள் பங்கேற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. எம்டிபி சிம்லா போன்ற உலகத் தரம் வாய்ந்த பந்தயங்கள் நம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ந்து வரும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்கும் என்ன செய்ய முடியும் என்பதை இது காட்டுகிறது. அவர்கள் சைக்கிள் ஓட்டுபவர்களை மேலும் சாதிக்க ஊக்குவிக்கிறார்கள். 2005 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மவுண்டன் பைக்கிங் வளர்ச்சியில் ஒரு முக்கிய மற்றும் முன்னோடி பங்கு வகித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். MTB ஷிம்லா மீண்டும் ஒருமுறை இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் இனம் என்பதை நிரூபித்துள்ளது, மேலும் இது ஹிமாச்சல் மற்றும் இந்தியர்களின் சுற்றுலாத் திறனைப் பற்றிய அற்புதமான காட்சிப்பொருளாகவும் உள்ளது.” என்று தெரிவித்தார்.

  • சுட்டெரிக்கும் வெயிலால் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.? ஒரு கிலோ கேரட், பீன்ஸ் என்ன விலை தெரியுமா.?
    on May 8, 2024 at 3:00 am

    வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் காய்கறிகளின் வரத்து சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக கேரட், பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.    வாடி வதங்கும் காய்கறிகள் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 7 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்குவதால் வீட்டிற்குள்ளே மக்கள் முடிங்கி கிடக்கும் நிலை உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு சில காய்கறிகள் செடியிலேயே வாடி விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் காய்கறிகளின் வரத்து சற்று குறைந்துள்ளதால் விற்பனை விலை அதிகரித்துள்ளது.   தக்காளி விலை என்ன.? சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவரைக்காய் விலை என்ன.? வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது. குறைந்தது முருங்கைக்காய் விலை காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உச்சத்தில் பீன்ஸ் விலை கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

  • 43 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி… இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா?
    on May 8, 2024 at 2:55 am

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ஷெட்டியின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி. இவரின் ஒரிஜினல் பெயர் ஸ்வீட்டி ஷெட்டி, பின்னர் சினிமாவுக்கு வந்த பின்னர் தன்னுடைய பெயரை அனுஷ்கா ஷெட்டி என மாற்றிக்கொண்டார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். படத்தின் தலைப்பை போல் படமும் சூப்பர் ஹிட் ஆனதால் அனுஷ்காவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. டோலிவுட்டில் பிசியாக இருந்த அனுஷ்காவை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தது இயக்குனர் சுந்தர் சி தான். அவர் இயக்கிய ரெண்டு படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த அனுஷ்கா, அதன்பின்னர் விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் சீரிஸ், அஜித் ஜோடியாக என்னை அறிந்தால், ரஜினியுடன் லிங்கா என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கோலிவுட்டிலும் டாப் நாயகியாக வலம் வந்தார். நடிகை அனுஷ்காவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது அருந்ததி மற்றும் பாகுபலி தான். இந்த இரண்டுமே வரலாற்று கதையம்சம் கொண்ட படங்கள், இதில் தன்னுடைய அசாத்திய நடிப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் அனுஷ்கா. அதிலும் பாகுபலி படத்தில் இடம்பெற்ற தேவசேனா கதாபாத்திரத்தில் தன்னைவிட யாரும் சிறப்பாக நடித்துவிட முடியாது என சொல்லும் அளவுக்கு நடித்து அப்ளாஸ் வாங்கினார். இதையடுத்து இஞ்சி இடுப்பழகி என்கிற படத்துக்காக உடல் எடையை அதிகரித்து நடித்த அனுஷ்காவுக்கு அதன்பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் போனதால் அவரின் மார்க்கெட்டும் மளமளவென சரிந்தது. கடைசியாக அவர் நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்துக்கு பின்னர் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா, இதுதவிர அவர் கைவசம் எந்தபடமும் இல்லை. இதையும் படியுங்கள்… Nayanthara Photos: கலக்கலான பார்ட்டி வேர் அணிந்து கடற்கரையில் காதல் கணவர் விக்கியுடன் நயன்! வைரலாகும் போட்டோஸ் தற்போது நடிகை அனுஷ்காவுக்கு 43 வயது ஆகிறது. இருப்பினும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். இவரைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது கசிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் உலா வந்தன. ஆனால் அவர்கள் இருவரும் தாங்கள் நண்பர்கள் எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். பின்னர் அவர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் வதந்தி பரவியது. தற்போது சினிமாவில் மார்க்கெட் இல்லாவிட்டாலும், நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு தெரிந்தால் நீங்களே ஷாக் ஆகிவிடுவீர்கள். அவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.130 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை அனுஷ்கா ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அதுமட்டுமின்றி விளம்பரங்களில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.  நடிகை அனுஷ்காவுக்கு சொந்தமாக பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் சொகுசு வீடுகளும் உள்ளதாம். கார்கள் மீது அலாதி பிரியம் கொண்ட அனுஷ்காவிடம் 10 சொகுசு கார்களும் உள்ளதாம். சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டிலும் பல கோடிகளை முதலீடு செய்து அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறாராம் அனுஷ்கா ஷெட்டி. இதையும் படியுங்கள்… Atlee: கண்ணே பட்டுடும்.. கல்யாண மாப்பிள்ளை போல் இருக்கும் அட்லீ! வெக்க புன்னகையில் பிரியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!

  • Savukku: சவுக்கு சங்கரை விடாமல் துரத்தும் புகார்.!!ஒரே நாளில் பதிவான அடுத்தடுத்த வழக்கால் உறுதியாகும் குண்டாஸ்
    on May 8, 2024 at 2:32 am

    சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துக்கள் யுடியூப்பர் சவுக்கு சங்கர் அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து ஒருமையில் விமர்சனம் செய்து வந்தார்.  இந்த சூழ்நிலையில் பெண் காவலர்களை கொச்சைப்படுத்தும் வகையில் யுடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். இதன் காரணமாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்ததாக கூறியும் தேனி போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் சவுக்கு சங்கர் மீது சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத்தலைவர் வீரலட்சுமி அளித்துள்ள புகார் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவில் சவுக்கு சங்கர் மற்றும் Redpix youtube பெலிக்ஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.   அடுத்தடுத்து பதிவான வழக்குகள் தமிழக பெண் காவலர்களை இழிவுபடுத்தி பேசியதாக தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத்தலைவர் வீரலட்சுமி அளித்த புகார் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் Redpix youtube சேனல் ஆகியோர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு குற்ற எண் 155/ 2024 பிரிவு 294b, 506 (1) ஐபிசி சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதே போல ஊடகவியலாளர் சந்தியா ரவிசங்கர் அளித்துள்ள புகார் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது புதிய எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  குண்டாஸ் சட்டத்தில் கைது.? என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டர் சந்தியா ரவிசங்கர் சென்னை மாநகர குற்ற பிரிவில் அளித்த புகார் அடிப்படையில் பெண் பத்திரிகையாளர் குறித்து கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவு குற்ற எண் 154/24 பிரிவு 294b, 354 d, 506(1), 509 IPC மற்றும் பிரிவு 4 TNPHW சட்ட படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்படுகிறது. சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் விரைவில் வெளியே வரமுடியாதபடி குண்டாஸ் சட்டம் பாய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  கை உடைஞ்சு போச்சு.. ஜெயிலில் காயங்களுடன் இருக்கும் சவுக்கு சங்கர்.. பகீர் கிளப்பிய சவுக்கு சங்கர் வழக்கறிஞர்

  • கல்யாணம் ஆகி 26 ஆண்டுகளுக்கு பிறகு வந்த சந்தேகம்… 47 வயது மனைவியை கதறவிட்ட கணவர்.. நடந்தது என்ன?
    on May 8, 2024 at 2:25 am

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (54). லாரி ஓட்டுநர். இவரது மனைவி ரெஜினாமேரி (47). இந்த தம்பதிக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இதில் சதீஷ்குமார் திருமணம் முடிந்து தனது மனைவியுடன் ஓசூரில் வசித்து வருகிறார். வர்ஷினி கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதையும் படிங்க: இன்ஸ்டா நண்பனை நம்பி சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம்! வீடியோவை வருங்கால மாப்பிள்ளைக்கு அனுப்பிய இளைஞர்கள்! இந்நிலையில், நாகேந்திரனுக்கு திடீரென தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் மனைவி ரெஜினா மேரி ஓசூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே  முத்தையாபுரத்தில் வசித்து வந்த வீடு ரெஜினா மேரி பெயரில் உள்ளது. அதை ரெஜினா மேரி பெயரிலும், கணவர் நாகேந்திரன் பெயரிலும் சேர்த்து மாற்றம் செய்வதற்கு குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெஜினாமேரி சொந்த ஊருக்கு வந்திருந்தார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரியாக ரெஜினா மேரியை வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து நாகேந்திரன் தப்பிச்சென்றுவிட்டார்.  இதையும் படிங்க:  சிகரெட்டால் சூடு! கணவனை கட்டிப் போட்டு கதற விட்ட மனைவி! வீடியோவுடன் வசமாக சிக்கிய பெண்ணை தட்டித்தூக்கிய போலீஸ் இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு ரெஜினா மேரியை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரெஜினா மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நாகேந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • இந்த மாதிரி ஒரு தோசையை நீங்க சாப்பிடிருக்க வாய்ப்பே இல்ல.. கண்டிப்பா ஒரு முறை ட்ரை பண்ணுங்க!
    on May 8, 2024 at 2:00 am

    பொதுவாகவே, தென்னிந்தியாவில் பெரும்பாலும் காலை உணவாக இட்லி தோசை தான் இருக்கும். தினமும் இட்லி தோசை சாப்பிடுவதால் உங்கள் குழந்தைகள் முகம் சுளிக்கிறார்களா..? அவர்களுக்கு வித்தியாசமான முறையில் என்ன ரெசிபி செய்து கொடுப்பது என்று தெரியவில்லையா..? அப்படியானால் கவலை வேண்டாம். உங்களுக்கான பதிவு தான் இது. ஆம் இன்று இந்த பதிவில் உங்களுக்காக ஒரு சூப்பரான ரெசிபி கொண்டு வந்துள்ளோம். அது வேறு ஏதும் இல்லங்க ‘சுரக்கா தோசை’ தான். உங்க வீட்டில் பச்சரிசியும், சுரைக்காயும் இருந்தால் காலை உணவாக அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான தோசை செய்து சாப்பிடுங்கள். அதுவும் தற்போது கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. கொளுத்தும் இந்த கோடை வெயிலில் உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைக்க இந்த தோசை சுட்டு சாப்பிட்டால் மிகவும் நல்லது. குறிப்பாக இந்த தோசை சுடுவது மிகவும். ஒருமுறை இந்த தோசையை உங்கள் வீட்டில் செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த சுரக்காய் தோசையை எப்படி செய்வது என்பதற்கான ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப் சுரைக்காய் – 1 கப் (துருவியது) பச்சை மிளகாய் – 2  மிளகு – 1/2 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் வெங்காயம் – 1  கொத்தமல்லி இலை – சிறிதளவு தண்ணீர், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு  செய்முறை: இந்த சுரக்காய் தோசை செய்ய முதலில், பச்சரிசியை தண்ணீரால் நன்கு கழுவி, 2 மணிநேரம் நேரம் ஊற வையுங்கள். அதன் பிறகு மிக்சர் ஜாரில் பச்சரிசியைப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு மென்மையாக அரைத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே மிக்சர் ஜாரில் துருவிய வைத்த சுரைக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து, அதை எடுத்து வைத்த பச்சரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். மேலும் அதில், மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை, உங்கள் சுவைக்கேற்ப உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது சுரைக்காய் தோசை செய்வதற்கான மாவு தயார். தோசை சுட தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாகுங்கள். பிறகு அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு அதன் மேல் கரைத்து வைத்த மாவை வட்ட வடிவில் ஊற்றி கொள்ளுங்கள். தோசை நன்றாக விட தோசையை சுற்றி எண்ணெய் விட்டுங்கள். தோசையைத் திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவ்வளவுதான் இப்போது அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான சுரைக்காய் தோசை ரெடி!!  இந்த சுரக்காய் தோசைக்கு நீங்கள் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது கார சட்னி வைத்து சுவை அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள்.. பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்..

  • அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை ஊத்தப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்!
    on May 8, 2024 at 1:35 am

    அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. ஆகையால்,  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  சென்னை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்திருந்தது.  இதையும் படிங்க: Tamilnadu Heavy Rain : இந்த 14 மாவட்டங்களில் நாளை கனமழை வெளுத்து வாங்கப்போகுதாம்! சென்னை வானிலை மையம் அலர்ட்! இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   கடந்த ஒரு மணிநேரமாக  திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடுமையான வெயிலால் வெந்து தணிந்து வந்த பொதுமக்களுக்கு இந்த திடீர் மழை இதமான குளிர்ச்சியான சூழலை தந்துள்ளது. அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

  • என்னது வேளாண்மைக்கு தடையற்ற மின்சாரமா? அமைச்சரே நிரூபிக்கத் தயாரா? சவால் விடும் அன்புமணி ராமதாஸ்!
    on May 8, 2024 at 1:04 am

    மின் துறை அமைச்சரின்  அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை என்றால், தமிழ்நாட்டில்  கடந்த இரு மாதங்களில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை  விவசாயத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு  12 மணி  நேரம் முதல் 16 மணி நேரம் வரை தடையற்ற மும்முனை மின்சாரம்  வழங்கப்படுவதாகவும்,  கிராமப்புறங்களில் உள்ள கடைமுனை நுகர்வோருக்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக மின் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.  இது முழுப்பூசணிக்காயை  சோற்றில் மறைக்கும் செயலாகும். அமைச்சரின் கூற்றில் சிறிதும்  உண்மையில்லை. மின்துறை அமைச்சரின் அறிக்கை வெளியான பிறகு  காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் பலரை தொடர்பு கொண்டு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறதா? என்று விசாரித்தேன். கடந்த காலங்களில் இருந்த அதே நிலைமை தான் இப்போதும் நீடிப்பதாகவும்,  தொடர்ச்சியாக 3 மணி நேரம் கூட  மும்முனை மின்சாரம் வழங்கப்பட வில்லை என்றும் உழவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி,  தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமப்பகுதிகளில்  மின்னழுத்தக் குறைபாடு தொடர்கிறது.  பல இடங்களில் 150 முதல் 160 வோல்ட் மின்சாரம் மட்டுமே  வழங்கப்படுவதாகவும், அதனால் பல மின்சாதனங்களை இயக்க முடியவில்லை என்றும்  பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மின் துறை அமைச்சரின்  அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை என்றால், தமிழ்நாட்டில்  கடந்த இரு மாதங்களில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை  விவசாயத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்; அந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு அந்தந்த பகுதிகளில் உள்ள உழவர்களிடம்  வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மை தானா? என்பதை கேட்டறியும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசு தயாரா? இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!   தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அதிகபட்ச மின் தேவை 4590 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. சென்னையின் மின் தேவையை நிறைவேற்றும் அளவுக்குக்கூட  மின்னுற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடையவில்லை என்பது தான் உண்மை.  எனவே, தமிழகம் சிறப்பாக உள்ளது, செழிப்பாக உள்ளது என்பன போன்ற பொய் பிம்பங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதை விடுத்து தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகளாக  கிடப்பில் போடப்பட்டுள்ள  17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்களை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

  • Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மே 08, 2024, புதன்கிழமை…
    on May 8, 2024 at 12:45 am

    பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம். நாள் : குரோதி ஆண்டு, சித்திரை 25. ஆங்கில தேதி : 08.05.2024. கிழமை : புதன்கிழமை. நாள் : கீழ்நோக்கு நாள் பிறை : தேய்பிறை திதி : இன்று காலை 8.59 வரை அமாவாசை, பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று மதியம் 1.33 வரை பரணி, பின்னர் கார்த்திகை. நாமயோகம் : இன்று மாலை 5.40 வரை சௌபாக்கியம், பின்னர் சோபனம்.  கரணம் : இன்று காலை 8.51 மணி வரை நாகவம், பின்னர் இரவு 7.39 வரை கிமிஸ்துகிணம், பின்னர் பவம். அமிர்தாதியோகம் : இன்று பிற்ப்கல் 1.33 வரை மரணயோகம், பின்னர் அமிர்தயோகம் Rasi Palan : பணத்தை சேமிப்பதில் இந்த 5 ராசிக்காரர்களை யாராலும் வெல்ல முடியாது..!! நல்ல நேரம் : காலை: 9.30 முதல் 10.30வரை மாலை : 4.30 முதல் 5.30 வரை மாலை : 6.30 முதல் 7.30 வரை எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் : ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30  வரை எமகண்டம் : காலை 7.30 முதல் 9.00 வரை குளிகை : காலை 10.30 முதல் 12.00 வரை சூலம் : வடக்கு. பரிகாரம் : பால். Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

  • Today Rasi Palan 08th May 2024 : இன்றைய ராசிபலன்கள்.. 12 ராசிக்கும் திருமண வாழ்க்கை எப்படி..?
    on May 8, 2024 at 12:00 am

    Today Rasi Palan : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்க்கலாம்.   மேஷம்: கூட்டாண்மை தொடர்பான வியாபாரம் முன்பு போலவே தொடரும். கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  ரிஷபம்: இடம் மாற்றம் தொடர்பான திட்டம் இருந்தால், அந்த வேலையைத் தொடங்க இன்றே சரியான நேரம். புதிய வருமானம் கிடைக்கும், நிதி நிலையும் மேம்படும்.  மிதுனம்: கடினமாக உழைத்தால் மட்டுமே அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இன்று வியாபாரத்தில் சில சாதகமான மற்றும் சாதகமான நடவடிக்கைகள் இருக்கும்.   கடகம்: நிலைமைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கோபமும் அவசரமும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். வியாபார நடவடிக்கைகளில் கட்டுப்பாட்டை வைத்திருப்பீர்கள்.  சிம்மம்: உங்கள் கொள்கைகளின்படி செயல்படுங்கள். உங்கள் விஷயங்களை கவனித்துக் கொள்ளுங்கள். நடந்து கொண்டிருக்கும் செயல்களில் இடையூறுகள் ஏற்படலாம்.   கன்னி: சொத்து சம்பந்தமான எந்த வேலையையும் செய்ய இன்று மிகவும் சாதகமான நேரம். பிரச்சனைகளுக்கு பயப்படுவதற்கு பதிலாக தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.    துலாம்: இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிர்த்துப் போராட உங்களுக்கு பலம் தருகிறது. தொழிலில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.   விருச்சிகம்: தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் எந்த சாதனையையும் சாதிப்பீர்கள். தொழில் ரீதியாக நிலைமை மிகவும் சாதகமாக உள்ளது.   தனுசு: சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமான பணிகள் அனைத்தும் தடையின்றி முடியும்.  மகரம்: உங்கள் நேரம் சிறப்பானது. வியாபாரத்தில் வெற்றிகரமான காலம் உண்டு.  உங்கள் வேலை வேகம் அதிகரிக்கும்.  கும்பம்: உங்களின் எந்த பிரச்சனையும் நெருங்கிய நண்பரிடம் விவாதிக்கவும்.  இந்த நேரத்தில் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.      மீனம்: வீண் வேலைகளில் நேரத்தை வீணாக்காதீர்கள். வியாபாரத்தில் எந்த ஒரு புதிய வேலையும், திட்டமும் தற்போதைய சூழ்நிலைகளால் வெற்றியடையாது.

  • Coimbatore : கோவை தொழிலதிபரிடம் 300 கோடி மோசடி.. 2 பெண்கள் உள்பட ஐவர் கைது – போலீசார் தீவிர விசாரணை!
    on May 7, 2024 at 6:33 pm

    கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார்.தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும் 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளனர். மோசடி செய்ததை அறிந்த சிவராஜ், கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் மோசடியில் ஈடுபட்ட வசந்த், சிவகுமார், ஷீலா, தீக்ஷா மற்றும் சக்தி சுந்தர் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரித்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி பணம்,140 பவுன் நகை,100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார்  நீதிமன்றத்தில் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்து மீண்டும் குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Nayanthara Photos: கலக்கலான பார்ட்டி வேர் அணிந்து கடற்கரையில் காதல் கணவர் விக்கியுடன் நயன்! வைரலாகும் போட்டோஸ்
    on May 7, 2024 at 6:31 pm

    நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், மேட்சிங் மேட்சிங் உடையில் கடற்கரையில் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.   40 வயதை எட்ட உள்ள நயன்தாராவுக்கு.. வயசு ஏற ஏற இளமையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. திருமணத்திற்கு பின்னர் இவர் தமிழில் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்த போதிலும் அம்மணி பாலிவுட்டில் நடித்த ‘ஜவான்’ படம் மெஹா ஹிட் ஆனது. அதே போல் இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தாதா சாஹிப் பால்கி விருதையும் பெற்றார் நயன்தாரா. இந்த படத்தை தொடர்ந்து, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியானது. எனவே தன்னுடைய சம்பளத்தையும் 6 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.  தமிழில் நயன்தாரா தற்போது மல்டி ஸ்டார் படமாக உருவாகி வரும்  ‘தி டெஸ்ட்’ மற்றும் யோகி பாபு உடன் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960′ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து, இன்று மலையாள நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கும் ‘தி ஸ்டுடென்ட்’ என்கிற படத்தின் பூஜை போடப்பட்டது. இந்த படத்தில் நயன்தாரா ஒரு ஆசிரியை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா நடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிட மறப்பதில்லை. அந்த வகையில் பீச்சில் பார்ட்டி வேர் அணிந்து காதல் கணவர் விக்கி மற்றும் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

  • கை உடைஞ்சு போச்சு.. ஜெயிலில் காயங்களுடன் இருக்கும் சவுக்கு சங்கர்.. பகீர் கிளப்பிய சவுக்கு சங்கர் வழக்கறிஞர்
    on May 7, 2024 at 6:28 pm

    சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அதில், சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் சார்பில் 3 வழக்கறிஞர் 2 மருத்துவர்களுடன் சிறையில் நேரடியாக சவுக்கு சங்கரை சந்தித்து பார்வையிட்டுள்ளனர். நேற்று என்ன நிலைமையில் இருந்தாரோ அதே நிலையில் தான் இன்றும் காயங்களுடன் உள்ளார். நேற்று வரை வலி மாத்திரைகள் கொடுக்கப்பட்ட நிலையில், fluid ஆக இன்று கொடுத்து வருகின்றனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளான கை உடைக்கப்பட்டது, காயங்கள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர் கோவை மத்திய சிறை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் சவுக்கு சங்கருக்கு கூடுதல் மருத்துவம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டும் தேவையான மருத்துவம் மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட மருத்துவ உதவி செய்யவில்லை என்று நேற்று மனு தாக்கல் செய்து இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சார்பில் நேரடியாக ஆய்வு செய்துள்ள நிலையில், சென்னையில் வழங்கப்பட்டுள்ள சிறைத்துறை அறிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. சனிக்கிழமை நீதிபதி முன்னிலையில் கைது குறிப்பாணையில் கையெழுத்திட்ட சவுக்கு சங்கர், இன்று காலை தேனி காவல்துறையினர் கைது குறிப்பாணை கொடுக்கப்பட்ட நகலில் கைரேகை இட்டுள்ளார் சவுக்கு சங்கர். ஏன் அவர் கைரேகை இட்டுள்ளார்? கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் காவல் மனு மீதான இன்று விசாரணை வந்த நிலையில், சவுக்கு சங்கர் தன் மீதான தாக்குதல் தொடர்பாக நீதிபதியிடம் தெரிவிக்க வாய்ப்புள்ளதால் தான் இன்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிமிடம் வரை எக்ஸ்ரே எடுக்கவில்லை.சிறையில் நேரடியாக ஆய்வு செய்த சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை பெற்று, சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நாளை கேட்க உள்ளோம்.  நாங்கள் எக்ஸ்ரே எடுக்க சொல்லி தான் கேட்கிறோம். சவுக்கு சங்கருக்காக மட்டும் இந்த முயற்சி இல்லை, நாள்தோறும் காவலர்களால் மனித உரிமை மீறல்கள், லாக் அப் தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளது, அதை சரி செய்யவே இந்த முயற்சி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் செல்வோம், ஆனால் முதலில் மருத்துவ உதவி அவசியம், 2 நாட்கள் போராடியோம் ஒரு எக்ஸ்ரே எடுக்க முடியவில்லை. அரசுக்கு எதிராக பேசியதன் காரணமாக காவல்துறை மூலமாக பழி வாங்கப்படுவதாக சவுக்கு சங்கர் எண்ணுகிறார். மருத்துவ உதவி செய்து அவர் உயிருடன் இருந்தால் தான் காவல்துறை வழக்கு போட முடியும் என்று சொல்லி கொள்கிறேன். காவல்துறை அராஜகம், சிறையில் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதை தான் இந்த வழக்கில் முக்கியமாக பார்க்க வேண்டும். சிறைத்துறை அறிக்கை தவறானது என்று இன்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை நாளை நிரூபிக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

  • ஏமாற்றிய நடுவர், சர்ச்சையோடு அவுட்டான சாம்சன் – வெற்றியோடு 5ஆவது இடத்திற்கு முன்னேறிய டெல்லி!
    on May 7, 2024 at 6:11 pm

    டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 56ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 56ஆவது லீக் போட்டி தற்போது அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். எனினும், பராக் ஒரு பவுண்டரி 3 சிக்சர் உள்பட 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டி விளையாடி சாம்சன் கடைசியில் 46 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 86 ரன்கள் எடுத்து சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் அவுட்டில்லை என்பது போன்று தெளிவாக தெரிகிறது. முகேஷ் குமார் ஓவரில் சாம்சன் பந்தை தூக்கி அடித்தார். அங்கு பவுண்டரி லைனில் நின்றிருந்த ஷாய் ஹோப் சர்ச்சையான முறையில் கேட்ச் பிடித்தார். கள நடுவரிடம் முறையிட்டும் பலனில்லாமல் கடைசியில் நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து ஷுபம் துபே 25 ரன்னிலும், டோனோவன் ஃபெரேரா 1 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் ரோவ்மன் பவல் 13 ரன்களில் ஆட்டமிழக்கவே ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் கலீல் அகமது, முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அக்‌ஷர் படேல் மற்றும் ரசீக் தர் சலாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் நீடிக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றியடைந்த டெல்லி கேபிடல்ஸ் 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே 5ஆவது இடத்திலிருந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 6ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.

  • Actress Alia Bhatt : 163 கைவினை கலைஞர்கள்.. 79 நாளில் செதுக்கிய அழகிய சேலை – மயிலென அணிந்து அசத்திய ஆலியா பட்!
    on May 7, 2024 at 5:56 pm

    Actress Alia Bhatt : இன்று நடைபெற்ற Met Gala 2024 நிகழ்ச்சியில் பல முன்னணி இந்திய பிரபலங்களும் கலந்துகொண்டு அசத்தினார். பிரபல நடிகை அலியா பட் அவர்களும் இதில் பங்கேற்றார். மெட்ரோபாலிடன் மியூசியம் ஆப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூஷன் என்ற நிறுவனத்திற்கு நிதி சேகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி தான் Met Gala. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் வாரம் இந்த நிகழ்ச்சி நியூயார்க் நகரில் நடைபெறும். Atlee: கண்ணே பட்டுடும்.. கல்யாண மாப்பிள்ளை போல் இருக்கும் அட்லீ! வெக்க புன்னகையில் பிரியா! லேட்டஸ்ட் போட்டோஸ்! இந்நிலையில் இந்தியாவில் சார்பில் பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் அசத்தலான ஆடைகளை அணிந்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தனர். குறிப்பாக பிரபல நடிகை ஆலியா பட் ஒரு அசத்தலான புடவையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த புடவை குறித்து பேசிய நடிகை ஆலியா பட், சுமார் 79 நாள்களில் 163 கைவினை கலைஞர்கள் ஒன்றிணைத்து தனது சேலையை வடிவமைத்ததாக பெருமிதத்தோடு கூறினார். CWC Season 5 Salary: ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • Atlee: கண்ணே பட்டுடும்.. கல்யாண மாப்பிள்ளை போல் இருக்கும் அட்லீ! வெக்க புன்னகையில் பிரியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!
    on May 7, 2024 at 5:50 pm

    இயக்குனர் அட்லீ, திருமணத்திற்கு தயாராக இருக்கும் மாப்பிள்ளை போல் இருக்க… அவரின் மனைவி பிரியா பட்டு சேலையில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.   முன்னணி இயக்குனர்களிடம், துணை இயக்குனராக பணியாற்றும் அனைவருமே… முன்னணி இடத்திற்கு வந்துவிடுவது இல்லை. ஆனால் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் அட்லீ. ‘ராஜா ராணி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதியை விஜயை வைத்து தெறி, மெர்சல், மற்றும் பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கி ஒட்டு மொத இயக்குனர்களையும் ஆச்சர்யப்பட வைத்தார். CWC Season 5 Salary: ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? காரணம், தளபதி விஜய்யை வைத்து இயக்க… பல முன்னணி இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கும் போது, இப்படி பட்ட பொன்னான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது தான். பிகில் படத்தை இயக்கி முடித்த கையேடு, ஷாருக்கானை வைத்து பாலிவுட் திரைப்படத்தை இயக்க தயாரானார். அடிக்கடி ஷாரூக்கானுடனான சந்திப்பு இந்த தகவலை உறுதி செய்தது. குழந்தைகள் விஷயத்தில் சவால் விட்டு சிக்கிய எழில்.! அசிங்கப்பட்டது தான் மிச்சம்.. நினைத்தேன் வந்தாய் அப்டேட்! மேலும் ஷாருக்கான் அப்போதைக்கு பதான் படத்தில் நடிக்க இருந்த நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னரே, அட்லீ இயக்கத்தில் நடித்து அவரே தயாரித்த ‘ஜவான்’ படத்தில் நடித்தார். இந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள், ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டதால், சில மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு தடை பட்டது. அனைத்து பிரச்சனைகளும் முடியும் வரை காத்திருந்து இந்த படத்தில் நடித்து முடித்தார். அட்லீயின் காத்திருப்புக்கு பலன் தரும் விதமாக ‘ஜவான்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இனி சீரியல் செட் ஆகாது.! கணவரோடு சேர்ந்து சட்டு புட்டுன்னு.. புது பிஸ்னஸில் இறங்கிய பிரியங்கா நல்காரி.! ஜவான் படத்தை முடித்த பின்னர் தன்னுடைய அடுத்த படத்தை அட்லீ, புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க உள்ளார். விரைவில் இந்த பாத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. பாலிவுட் திரையுலகில் தற்போது தயாரிப்பாளராகவும் அட்லீ களமிறங்கியுள்ள நிலையில்… அடிக்கடி ரசிகர்களை கவரும் விதமாக போட்டோ ஷூட் செய்து, அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். Selvaraghavan: தனுஷே அடிவாங்குவான்..! செல்வராகவனை பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க… பிரபலம் கூறிய தகவல்! அந்த வகையில் தற்போது மாப்பிள்ளை போல் சும்மா ஜம்முனு ஷர்வானி அணிந்து அட்லீ போஸ் கொடுக்க, அவரின் மனைவி பிரியா பட்டு சேலையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

  • நயினார் நாகேந்திரன் விவகாரம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கொடுத்த ட்விஸ்ட்..
    on May 7, 2024 at 5:34 pm

    திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வேப்பம்பட்டு தனியார் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆகியோருடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரிதா சாகு, திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ததாகவும் ஆய்வில் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் கண்டறியப்படவில்லை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது எனவும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யாதது குறித்த கேள்விக்கு ஓவர் லோடு காரணமாகவே கண்காணிப்பு கேமராவில் சற்று நேரம் பழுது ஏற்பட்டதாகவும்ம், பின்னர் அது சரி செய்யப்பட்டு தமிழக முழுவதும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதுபோன்ற ஓவர் லோடு ஆகாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தினால் உடல் சோர்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட நான்கு கோடி பணம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எது மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவு எடுக்கும் எனவும், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நைனார் நாகேந்திரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.

  • கோலி, தோனி, ரோகித் சாதனையை அசால்ட்டா முறியடித்த சஞ்சு சாம்சன்: அதிவேகமாக 200 சிக்ஸர்கள் விளாசி சாதனை!
    on May 7, 2024 at 5:25 pm

    டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 56ஆவது லீக் போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் விளாசி ரோகித் சர்மா, விராட் கோலி, எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 56ஆவது லீக் போட்டி தற்போது அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியில் அபிஷேக் போரெல் மற்றும் ஜாக் பிரேசர் மெக்கர்க் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே பிரேசர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். முதல் ஒவரில் 6, 2ஆவது ஓவரில் 10, 3ஆவது ஓவரில் 15 என்று ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 4ஆவது ஓவரை எதிர்கொண்ட ஜாக் பிரேசர் மெக்கர்க், ஆவேஷ் கானின் முதல் ஓவரிலேயே 4, 4, 4, 6, 4, 6 என்று 28 ரன்கள் எடுத்து 19 பந்துகளில் அரைசதமும் அடித்தார். இதன் மூலமாக இந்த சீசனில் 4ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். கடைசியில் 20 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அபிஷேக் போரெல் 28 பந்துகளில் தனது முதல் அரைசதம் அடித்தார். மேலும், டெல்லி கேபிடல்ஸ் ஆலோசகரான கங்குலிக்கு தனக்குரிய பாணியில் நன்றி தெரிவித்தார். அவர், 36 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் 1 ரன்னிலும், அக்‌ஷர் படேல் 15, ரிஷப் பண்ட் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டெல்லி கேபிடல்ஸ் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த குல்பதீன் நைப் 19 ரன்களில் வெளியேறினார். கடைசியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 5 ரன்கள் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 2ஆவது பந்திலேயே 4 ரன்னில் ஆட்டமிழந்தார். பட்லர் 19 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர், 26 பந்துகளில் அரைசதம் விளாசி இந்த சீசனில் 5ஆவது அரைசதம் கடந்தார். இந்த நிலையில் தான் இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதுவரையில் 162 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் 159 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 200 சிக்ஸர்கள் விளாசி ரோகித் சர்மா, எம்.எஸ்.தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக எம்.எஸ்.தோனி 165 இன்னிங்ஸ், விராட் கோலி 180 இன்னிங்ஸ், ரோகித் சர்மா 185 இன்னிங்ஸ், சுரேஷ் ரெய்னா 193 இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸர்கள் விளாசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை 159 இன்னிங்ஸிலேயே சஞ்சு சாம்சன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேக்கிங் நியூஸ், விளையாட்டு, டிவி, ரேடியோ மற்றும் பல. சர்வதேச செய்திகள் முதல் தேசியச் செய்திகள், அரசியல் முதல் சமூகம், பாதுகாப்பு முதல் தற்போதைய விவகாரங்கள், தொழில்நுட்பச் செய்திகள் முதல் பொழுதுபோக்குச் செய்திகள் வரை உள்ளடக்கிய IOB செய்தி வலையமைப்பு, ஒவ்வொரு செய்தி கவரேஜும் பாரபட்சமற்றது, அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்யப்பட்டது, நம்பகமானது மற்றும் நம்பகமானது. IOB நியூஸ் நெட்வொர்க் தகவல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு – நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் வயது என்னவாக இருந்தாலும்.